பிரம்மாண்டத்தின் உச்சம்.. ஷங்கரின் 2.0 டீஸர் இதோ

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் டீசர் வெளியானது. 2டி டீஸர் யூடியூப் இணையதளத்திலும், 3டி டீஸர் தியேட்டர்களிலும் இன்று வெளியானது. ஏற்கெனவே வெளியாகி இருந்தது. ஷங்கர் இயக்கத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தயாராகி வரும் திரைப்படம் ‘2.0’. இதில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ளார்.

பல நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் இதனை  லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரொடெக்‌ஷன் வேலைகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.2.0 டீஸர் இன்று காலை 9 மணிக்கு தான் அதிகாரபூர்வமாக திரைக்கு வரவுள்ளது. ஆனால் தற்போது இணையத்தில் டீஸர் லீக் ஆகியுள்ளது.

இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள இந்த டீஸருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி பாலிவுட் ரசிகர்களும் அதிகம் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

ஆனால் தற்போது லீக் ஆகியுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.. பல பாலிவுட் செய்தி இணையதளங்கள் இந்த டீசர் லீக் பற்றி செய்தி வெளியிட்டுள்ளன. வைரலாகும் 2.0 படத்தின் டீஸர் இதோ