கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் பெண்களுக்கான உடை அணிந்து விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாணவர்களிடையே பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியான ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரியில் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்த பல மாணவர்கள் படித்து வருகின்றனர்.அதே கல்லூரியில் கேரளாவின் மலப்புரம் பகுதியை சேர்ந்த ராபர்ட் என்பவரும் பொறியியல் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார்.
இவர் நேற்று தனது விடுதி அறையில் பெண்களுக்கான உடைகளை அணிந்துகொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த கல்லூரி நிர்வாகம் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தது. உடனடியாக அங்கு விரைந்த காவல்துறையினர் சக மாணவர்களை விசாரித்ததில் எபின் ராபர்ட் என்பவருக்கு பெண்ணாக மாற விருப்பம் இருந்துள்ளதாகவும்
அவ்வப்போது அறையில் யாரும் இல்லாத நேரங்களில் பெண் உடைகளை அணிந்து கொண்டு வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அதனையும் வீடியோ பதிவு செய்துள்ளார். எபின் ராபர்ட் உடல் உடனடியாக பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, போலீசார் மேலும் தீவிரமாக மாணவர்களை விசாரித்து வருகின்றனர்.