பிரியங்கா வழக்கில், குற்றவாளிகள் நால்வரின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியீடு! மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்.

ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி (26) கடந்த மாதம் நான்கு நபர்களால் சீரழிக்கப்பட்ட நிகழ்வு சம்மந்தமாக நன்கு போரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நால்வரையும் போலீசார கடந்த 6ஆம்
தேதி சம்பவம் நடந்த பகுதிக்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது நால்வரையும் போலீசார என்கவுண்டர் செய்தனர். எனவே நால்வரது சடலமும் அரசு மருத்துவமனையில் நீதிமன்ற உத்தரவின்படி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நால்வருக்கும் நடந்த பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகளை மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது, இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், நான்கு பேரின் உடல்களையும் தோட்ட  துளைத்திருந்த போதிலும் உடலுக்குள் தங்கவில்லை. முக்கிய குற்றவாளி முகமது உடலில் 4 தோட்டவும் பாய்ந்துள்ளது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

அதே போல ஷிவா மற்றும் சின்னகேசவலு உடலில் மூன்று தோட்டவும், நவீன் உடலில் ஒரு தோட்டவும் பாய்ந்துள்ளது என கூறியுள்ளனர். இந்த தோட்டாக்கள் இன்னும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது, அது கிடைத்த பின்னரே யாரு என்கவுண்டர் செய்தார் என்று தெரியவரும். போலீசாரின் என் கவுண்ட்டருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் சம்பவ இடத்தில் ஆணையத்தின் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.