உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான இந்திய தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், ரியல் எஸ்டேட் அதிபர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும் நேற்று இரவு மும்பையில் ஆடம்பர திருமணம் நடந்தது. இந்த திருமணத்துக்காக 750 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திருமண வரவேற்பில் ரஜினி கலந்து கொண்டுள்ள காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
பிறந்தநாளன்று ரஜினியைப் பார்க்கமுடியாதோ என ஏங்கிய ரசிகர்களுக்கு, ரஜினி திருமண வரவேற்பில் கலந்து கொண்ட வீடியோ மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதேசமயம், பிறந்தநாளன்று ரசிகர்களை சந்திப்பதைவிட திருமண வரவேற்பு முக்கியமாகப் போய்விட்டது ரஜினிக்கு என்று இன்னொரு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுக்கு ரசிகர்கள் ரஜினிக்கு ஆதரவாக விவாதித்து வருகின்றனர்.