பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞர்! என்ன காரணம்? விசாரணையில் தெரிந்த உண்மை

செங்கல்பட்டு அடுத்த மேலேரிபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருக்கு சூர்யா(27) என்ற மகன் உள்ளார். கேட்டரிங் படித்துள்ள சூர்யா பவுஞ்சூரை சேர்ந்த காயத்ரி (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு, செங்கல்பட்டில் வாழ்ந்து வந்தார். காயத்ரி கர்ப்பமாக இருப்பதால், கடந்த வாரம் தன்னுடைய தாயின் வீட்டிற்கு சென்றுவிட்டார். சூர்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சூர்யாவின் வீட்டிற்கு பைக்கில் வந்த நான்கு பேர் அவரை வெளியில் அழைத்து சென்றுள்ளனர். அவர்களுடன் சென்ற சூர்யா அதன் பின் வீட்டிற்கு வரவேயில்லை.

இந்நிலையில் நேற்று காலை மேலேரிபாக்கம் ஏரி வழியாக, அப்பகுதியை சேர்ந்த சிலர் நடந்து சென்றபோது, ஒருவர் மிகவும் மோசமான முறையில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் பொலிசார் அப்பகுதிக்கு விரைந்து வந்து பார்த்த போது, அந்த நபரின் கழுத்து மற்றும் பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. சடலத்தின் அருகே பிளாஸ்டிக் டம்ளர் கிடந்தது. அனைவரும் ஒன்றாக மது அருந்தியது தெரியவந்துள்ளது. இதையடுத்து சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அதன் பின் இது குறித்து நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், மேலேரிபாக்கத்தைச் சேர்ந்த ராமு என்பவரின் மகள் ஹேமலதாவுக்கு திருமணம் ஆகிவிட்டதாக செங்கல்பட்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட அறிவிப்பு ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. இதைக் கண்ட உறவினர்கள் உடனடியாக இது குறித்து ராமுவிடம் கூறியுள்ளனர். இதனால் அவர் உடனடியாக ஹேமாவின் கழுத்தில் பார்த்த போது தாலி இருந்துள்ளது.

இது குறித்து அவர் கேட்ட போது, தனக்கும், அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் ஒரு வாரத்துக்கு முன் திருமணம் நடந்ததாகவும், தங்களுக்கு செங்கல்பட்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் சூர்யா தான் திருமணம் செய்து வைத்தார் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து நேற்று முன் தினம் இரவு கார்த்திக்கின் அண்ணன் ஹரி உள்பட 4 பர் சூர்யா வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அதன் பின் அவரை மேலேரிபாக்கம் ஏரிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அரிவாள் மற்றும் கத்தியுடன் காத்திருந்த ஹேமலதாவின் தாய் மாமன் அழகேசன் மற்றும் அவரது அண்ணன்கள் சந்தோஷ், விக்கி ஆகியோர் சூர்யாவின் கழுத்தை அறுத்தனர். பின்னர் ஆத்திரம் தீராமல் அவரது பிறப்புறுப்பையும் அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பொலிசார் தப்பிச் சென்ற கொலையாளிகளை தேடி வருகின்றனர்.