பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாற்றி அழகான தமிழ் நடிகைகள் யார் யார் தெரியுமா?

ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரையுலகில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வது வழக்கமான ஒன்று தான். தங்களது அழகினை மேம்படுத்திக்கொள்ளவும், அடுத்தடுத்து பட வாய்ப்புகளை அதிகரித்துக்கொள்ளவும் தான் இந்த காஸ்மெட்டிக் சர்ஜரி எனப்படும் பிளாஸ்டிக் சர்ஜரிகள் நடிகைகள் செய்து வருகின்றனர். ஆனால், தமிழ் திரையுலக நடிகைகள் இந்த சர்ஜரி செய்துகொள்வது சற்று ஆச்சரியம் தான். ஆனால் த்ரிஷா, தமன்னா, அனுஸ்கா ஆகிய நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாக வதந்திகள் வந்தது. ஆனால், யார் யார் உண்மையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளனர் என்று உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் பார்க்கலாம்.

முதன் முதலாக தமிழ் நடிகைகளில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது முன்னாள் நடிகை ஸ்ரீதேவி தான். அவர் தன் அழகை மேம்படுத்த எண்ணி தனது முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார்.உலகநாயகன் கமல்ஹாசனின் முதல் மகள் ஸ்ருதி ஹாசன், தனது மூக்கை சற்று தோரணையாக மாற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார். அதன் பின்னர் அவருக்கு தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் அதிகமாக வந்தது.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களின் முன்னணி நடிகையான சமந்தா தனது கன்னம் மற்றும் மூக்கினை அழகாக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார். நடிகை காஜல் அகர்வாலும் தனது முகத்தை அழகாக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார்.

தற்போது தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற நாயகியாக கலக்கி வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது உடம்பினை குறைக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். அதனுடன் சேர்த்து தனது முகத்திற்கும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். பிளாஸ்டிக் சுரகேரி செய்து முகத்தை மாற்றி கொண்ட நடிகைகளின் புகைப்படங்களை பார்க்க கீழேயுள்ள விடியோவை பாருங்கள்