புகழின் உச்சத்தில் இருந்த நடிகர் பிரஷாந்துக்கு இப்படி ஒரு பரிதாப நிலைமையா? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் கொடிகட்டி பறந்தவர் நடிகர் பிரசாந்த். 90களில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவர். விஜய், அஜித் என தற்போதைய முன்னணி நடிகர்களுக்கெல்லாம் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் நடிகர் பிரசாந்த். நடிகர் பிரசாந்த் ஜாக்லெட் பாய் என பெண்கள் அனைவராலும் ஆசையுடன் அழைக்கப்பட்டவர் . புகழின் உச்சத்தில் இருந்த அவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்துவந்த பிரசாந்த் படங்கள் வரிசையாக தோல்வி அடைந்தன. இதனால் சற்றுகாலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

இந்நிலையில் தாறுமாறாக உடல் எடை கூடி பார்ப்பதற்கே வித்தியாசமாக தோற்றமளித்தார். பின்னர் மீண்டும் சினிமாவில் காலடி எடுத்துவைத்த பிரசாந்துக்கு மீண்டும் அணைத்து படங்களும் தோல்வியை கொடுத்தது. இந்நிலையில் சமீப காலமாக மார்க்கெட் இழந்து மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றார். தன் இடத்தை மீண்டும் பிடிக்க, அதற்காக தெலுங்கு படங்களில் கூட நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

அப்படி ராம்சரண் நடிக்கும் ஒரு படத்தில் பிரஷாந்த் அவருடைய நண்பராக 4 பேரில் ஒருவராக நடித்துள்ளார். இதை பார்த்த தமிழக ரசிகர்கள் கொதித்து எழுந்துவிட்டனர். எனினும், தமிழில் ஜானி படத்தின் மூலம் பிரஷாந்த் மீண்டும ரீஎண்ட்ரி கொடுத்திருக்கின்றார்.

இதேவேளை, அவரின் தற்போதைய புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. அதனை பார்த்த பெண் ரசிகர்கள் இது பிரசாந்தா..? என்று அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த அளவு தாறுமாறாக உடல் எடை கூடியுள்ளது.