பிரபல டிவியில் தற்போது மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். இந்தியில் 12 சீச ன்களை கடந்து சென்ற பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்துத் தான் கடந்த ஆண்டு தமிழிலும் இந்நிகழ்ச்சியை ஆரம்பித்தது பிரபல ரிவி. நிகழ்ச்சியினை காப்பியடித்த நிர்வாகம் அடுத்தடுத்து ஹிந்தி நிகழ்ச்சியில் நடைபெற்ற பல சம்பவங்களை காப்பி அடித்துள்ளது.உதாரணமாக, ஹிந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கும் நடிகர் சல்மான்கான் ஒரு எபிசோட்டில் போட்டியாளர்களிடம் கலந்துரையாடும் போது கோவமாக தான் அணிந்திருக்கும் கோட்டினை கழற்றி எறிவார்.
இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது. அது போன்று இந்த சீசனில் கமல் போட்டியார்களிடம் உரையாடிக்கொண்டிருக்கும் போதே தனது கோட்டினை கழற்றி கீழே எறிந்தார்.கமலின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களின் மூலம் கேலியாக விமர்சிக்கப்பட்டு வைரலானது. மேலும், நிகழ்ச்சியை தான் காப்பி அடித்தார்கள் என்றால் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் டாஸ்க்கை கூட தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் காப்பி அடித்து வருகின்றனர் என்று சமீபத்தில் தான் தெரியவந்தது.
“Ticket To Finale” டாஸ்கில் கண்ணாடி பௌலில் தண்ணீர் ஏந்தி நடக்கும் டாஸ்க் ஹிந்தி பிக்பாஸ் சீசன் 10 -ல் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற கோலமாவு டாஸ்க் அப்படியே காப்பி என்று தெரியவந்துள்ளது. இந்த முறை தெலுங்கில் நடைபெற்ற பிக்பாஸ் டாஸ்கினை தமிழில் காப்பி அடித்துள்ளனர். தமிழில் நடைபெற்ற கடந்த சீசன் 1 போன்று சீசன் 2 அவ்வளவு சுவாரசியமாக இல்லை என்பதே உண்மை.
இப்படி அனைத்தையுமே மற்ற மொழி நிகழ்ச்சியினை பார்த்து அப்படியே காப்பி அடித்து அதனை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்துவரும் ரசிகர்கள் அனைவரும் அதனை கிண்டலடித்து வருகின்றனர்.