புகைப்படத்தில் இருக்கும் இந்த குட்டி பாப்பா பிக் பாஸ் பிரபலமா..??உங்களுக்கு யார்னு தெரியுதா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல பரிட்சியமில்லாத முகங்கள் இருந்தாலும், அதில் ஒரு சில முகங்கள் நமக்கு மிகவும் பரிட்சியமானவார்கள் தான். அந்த வகையில் நடிகை ஜனனி ஐயரும் ஒருவர். 2011ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான ‘அவன் இவன்’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார் நடிகை ஜனனி.

இவர் தமிழில் முதன் முதலில் 2009ம் ஆண்டு வெளியான ‘திறு திறு துரு துரு’ என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் சிம்பு நடித்த விண்ணை தாண்டி வருவாயா” என்ற படத்திலும் ஒரு துணை இயக்குனர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் இவரது குழந்தை பருவ புகைப்படங்களை நடிகை ஜனனி ஐயர் தனது ட்விட்டர் பக்கத்தில் சில மாதங்களுக்கு முன்னர் பதிவிட்டுள்ளார். மேலும்,ஒரு புகைப்படத்தில் சிறு வயதில் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையம் பதிவிட்டுள்ளர் நடிகை ஜனனி ஐயர்.

தமிழில் ‘தெகிடி, அதே கண்கள், பலூன்’ போற படங்களில் இவரது கதாபாத்திரங்கள் வெகுவாக பேசப்பட்டது. தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் இவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான ரசிகர்களும் இருக்கின்றனர். பிக் பாஸ் வீட்டில் ‘விஷ பாட்டில்’ என்று அழைக்கப்பட்டு வரும் இவர், சமீப காலமாக சக போட்டியாளர்கள் சிலரிடம் கெட்டபெயரையும் எடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடதக்கது.