புத்திசாலி என காட்டிக்கொள்ள நிகழ்ச்சிக்கு வந்த பெண்ணை அசிங்கப்படுத்திய கோபிநாத்! ரசிகர்களை கோபமாகிய காணொளி..!! நீங்களே பாருங்க

தமிழ் தொலைக்காட்சிகளில் பல வருடமாக பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி நீயா நானா. கோபிநாத் தொகுத்துவழங்கிவரும் இந்நிகழ்ச்சியில் வாரம் ஒரு தலைப்பை வைத்து விவாதிப்பார்கள். இதில் பலமுறை ஹெலிகாப்டர் கேட்ட பெண் போன்று சர்ச்சையாகி வைரலாகியுள்ளது. இந்நிலையில் இந்த வாரம் நாட்டு மருத்துவ மாமியார்! VS மாடர்ன் மெடிசின் மருமகள்! என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. மாமியார் தலைப்பில் இருந்த ஆசிரியை ஒருவரிடம் கோபிநாத் காய்ச்சல், சளிக்கு என்ன மருந்து எடுப்பீர்கள் என்று கேட்டார்.

அதற்கு மருந்து எடுக்கமாட்டேன் தானாக சரியாகிவிடும் என்றார். இதையடுத்து கண்ணாடி மட்டும் ஏன் போடுகிறீர்கள் தானாகவே கண் தெரியாதா தண்ணீரை எடுத்து கண்ணில் ஊற்றிக்கொள்ளுங்கள் என்றார். இதையடுத்து அந்த பெண் பேசிய மைக்கை ஆப் செய்துவிட்டு பேட்டரி காலியாகிவிட்டது என்று செட்டிலிருந்தவர் கூற, பேட்டரிய ஏன் மாத்தனும் தானாகவே சரியாகிவிடும் என்று கிண்டலாக கூறியுள்ளார். இந்த ப்ரோமோவை பார்த்த பலரும் உங்கள் புத்திசாலித்தனத்தை காட்ட அவர்களை அசிங்கப்படுத்தாதீர்கள். காய்ச்சலும், கண் பார்வை கோளாரும் ஒன்றா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.