தற்போதைய காலகட்டத்தில் கள்ளக்காதல் என்பது மிகவும் சாதாரணமான ஒன்றாகிவிட்டது.
இதை நாம் எப்படி தடுப்பது வாங்க பார்க்கலாம் ..!
1. சிறு வயதில் திருமணம்
இந்தியா முழுவதும் சிறு வயது திருமணம் நடந்து கொண்டு தான் வருகிறது அதை தினமும் நாம் செய்திகளில் நாம் பார்த்துக்கொண்டு தான்இருக்கிறோம்.
இந்த திருமணத்தால் அந்த பெண் தனது இளமை பருவத்தில் கிடைக்கும் சந்தோஷத்தை இழந்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுகிறார் .
ஒரு கட்டத்தில் தனக்கு ஏத்த துணையை கல்யாண பருவத்தில் தேட தொடங்கி விடுகிறார். இந்த தேடல் அதிகம் கொலையில் தான் முடிகிறது.
2. கணவன் மனைவியை புறக்கணிப்பது
பணிச்சுமை ,இது தற்போது மிக அதிகம் அதுவும் சென்னை போன்ற மிகப்பெரிய நகரத்தில்80% என்று கணக்கெடுக்கப்பட்டுள்ளது .
இதனால் கணவனை விட்டு மனைவி அதிகம் தனிமையில் தான் இருக்கிறார்கள் . கணவன் மனைவி இருவரும் இரவு பகல் என்று மாறி மாறி வேலை செய்வதால் அவர்களுக்குள் உள்ள புரிதல் மிகவும் குறைவு
இதனால் மனைவி தான் வேலை செய்யும் இடத்திலோ அல்லது வெளியிலோ தனக்கேற்ற துணையை தேடிக்கொள்கிறார் .
3.கணவனின் சந்தேக புத்தி
என்னதான் மனைவி ஒழுங்காக இருந்தாலும் கணவர்களுக்கு மனைவின் மேல் எப்போதும் ஒரு சந்தேகம் இருக்கும் அதை சிலர் வெளிப்படையாக கூறுவார்கள் சிலர் மனதில் வைத்துகொள்வார்கள் .
வெளிப்படையாக கூறி மனைவியை துன்புறுத்துவது அவர்களை தவறு செய்ய தூண்டும் வகையில் அமைகிறது .
செய்யாத குற்றத்திற்காக அசிங்க படுவதை விட அந்த தப்பை செய்து விடலாம் என்று நினைக்க தோன்றும்.