நாம் அன்றாடம் பயன்படுத்தும் எண்ணெய்களில் நிறையவே கலப்படமும் நடப்பதாகக் கூறப்படுகின்றது. இவை கண்ணாடி பாட்டில்களில் அடைக்கப்பட்டு வண்ணமயமான ஸ்டிக்கர்களுடன் கணஜோராக காட்சியளிக்கின்றன.
கிட்டத்தட்ட எல்லா பாட்டில்களின் லேபிளின் மீதும் ‘ஒரிஜுனல் ஆர்கானிக்’ என்றே குறிப்பிடப்பட்டிருக்கின்றது. சூப்பர்மார்க்கெட்களில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இவை நம் அனைவரின் கண்களையும் ஈர்க்கவே செய்கின்றது. ஆனால், எளிதில் கலப்படம் செய்யக்கூடிய பொருட்களில் முதலிடம் வகிப்பது எண்ணெய்தான்.
வீட்டில் உள்ள பாக்கெட் எண்ணெயினை சிறிது கையில் எடுத்து தடவிய பின்னர் தண்ணீர் கொண்டு கழுவி பாருங்கள்.வழுவழுப்பு போகாது.சோப்பு கொண்டு கழுவினால்தான் போகும்.
தரமான,சுத்தமான எண்ணெயினை கையில் தேய்த்து பின்னர் தண்ணீரினால் கழுவினால் கை சுத்தம் ஆகி விடும். இது எதற்கு கூறினேன் தெரியுமா? நம் வயிற்றில் செல்லும் எண்ணெய் எப்படி வெளியேறும்? நம் உடலின் உள் பல இடங்களில் ஒட்டி கொள்ளும்.
பின்னர் நம் உடம்பு கடும் நோயால் பாதிக்கப்படும். உடலை காக்க விலையை தியாகம் செய்தால்தான் நமக்கு நல்ல அக்மார்க் பொருள் கிடைக்கும் .சிக்கனத்தின் அளவை கொண்டு நல்ல தரமான எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.