உத்தர பிரதேசத்தின் சஹாரன்பூர் பகுதியை சேர்ந்த பெண் நடாஷா. இவரது சிறுநீரக பாதையில் கல் ஒன்று இருந்துள்ளது. அது 22 செ.மீ. நீளமும், 60 கிராம் எடையும் கொண்டது. அவர் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் நடாஷா என்ற பெண் அனுமதிக்கப்பட்டார். இவரது சிறுநீரக பாதையில் 22 செ.மீ. நீளமும், 60 கிராம் எடையும் கொண் கல் இருந்துள்ளது. சிறுநீரக பாதையில் பெரிய அளவிலான கல் இருந்தும் நடாஷாவுக்கு எந்தவித வலியும் ஏற்படவில்லை. இந்நிலையில் 4 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் இந்த கல் நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாவது, இதுபோன்ற மிக பெரிய கற்கள் திறந்த வழியிலான நடைமுறைகளின் வழியே நீக்கப்படும்.
இது உலக அளவில் மிக பெரிய கல் ஆகும். இதற்கு முன் 21.5 செ.மீ. அளவிலான கல் நீக்கப்பட்டு உள்ளது. இவருக்கு 4 மணிநேரம் நடந்த அறுவை சிகிச்சையில் டா வின்சி எனப்படும் ரோபோ பயன்படுத்தி ஒரே கட்டத்தில் கல் நீக்கப்பட்டு உள்ளது. ரோபோ பயன்படுத்துவது ஒரு சில மருத்துவமனைகளிலேயே உள்ளது. இதனால் தழும்பு இல்லாமல் அதிவிரைவில் பழைய நிலைக்கு திரும்பி விடலாம் என தெரிவித்து உள்ளது.