பெண்ணை அடித்து இழுத்திட்டு போனாங்க… அவனை பத்தி அப்போ தெரியல.. பொள்ளாச்சி சம்பவ வீட்டின் அருகில் வசிப்பவர் வெளியிட்ட தகவல்

பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள் பாலியல் பலாத்கார செய்யப்பட்ட நிலையில் சம்பவம் நடந்த வீட்டின் அருகில் வசிக்கும் நபர் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். இது குறித்த செய்தியை பிரபல பத்திரிக்கையான விகடன் வெளியிட்டுள்ளது. பொள்ளாச்சியின் சின்னப்பம்பாளையத்தில் தான் அந்த வீடு உள்ளது. இது சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நால்வரில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் வீடாகும். அந்த வீடு குறித்தும் அங்கு நடந்தது குறித்தும் நீண்ட யோசனைக்கு பின்னர் 40 வயதான நபர் ஒருவர் பேசினார். அவர் கூறுகையில், செய்தியில் பார்த்த பின்னர் தான் இப்படியொரு விடயம் இந்த வீட்டில் நடந்ததே தெரியும்.

இந்த வீட்டைச் சுற்றி உள்ள வீடுகளில் பெரும்பாலும் ஆட்கள் இருக்க மாட்டார்கள். அதனால் யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளமாட்டார்கள் இங்கு திருநாவுக்கரசு அடிக்கடி காரில் வந்து போவான். அவன் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவான் என நாங்கள் நினைத்தோம். ஆனால் ஒவ்வொரு முறையும் காரில் ஒரு பெண்ணை அழைத்து வந்து இப்படி செய்திருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியவே தெரியாது. 7 வருடங்களாகவே திருநாவுக்கரசு குடும்பம் பொள்ளாச்சி மெயின் இடத்துக்கு போய்விட்டனர்.

திருநாவுக்கரசின் அப்பாவுக்கு வட்டி தொழில் தாம் முக்கிய தொழில். அவரின் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவன் தான் திருநாவுக்கரசு. முன்னர் அவன் பேஸ்புக்கில் பதிவிட்ட வீடியோவில், பெற்றோருக்கு தெரியாமல் நிதி நிறுவனம் ஆரம்பித்ததாக தெரிவித்தான். பெண்களை மிரட்டி அந்த பணத்தில் நிறுவனம் ஆரம்பித்தான் என இப்போது தான் தெரிகிறது என கூறினார்.

திருநாவுக்கரசர் கூட்டாளிகளான சபரி, வசந்த், தினேஷ் ஆகியோர் பற்றி சிலர் கூறுகையில், ஒரு மாதத்துக்கு முன்னால் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சாலையில் இந்த நால்வரும் இருந்த காரில் உடன் இருந்த பெண் கீழே இறங்கி ஓட முயற்சி பண்ணியிருக்காங்க. ஆனால் அவரை நால்வரும் அடித்து இழுத்து கொண்டு போனதை ஒரு பெரியவர் செல்போனில் வீடியோ எடுக்க முயன்றார். ஆனால் பதட்டத்தில் அவரால் எடுக்கமுடியவில்லை என்ற பகீர் தகவலை கூறியுள்ளனர்.