பெயரின் முதல் எழுத்து என்ன?.. இதோ உங்களுடைய வாழ்க்கை ரகசியம்…

இன்றைய நவீன உலகில் பலரும் தங்களின் பெயர்களை தங்களுக்கு பிடித்தார் போல மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பிறக்கும் போது அவர்களின் பிறந்த நேரம் பார்த்து சரியான எழுத்தில் வைக்கும் பெயருக்கு என்று தனிசிறப்புள்ளது. ஏனெனில் நமது பிறந்த நேரம் நம்முடைய எதிர்காலம் மற்றும் குணாதிசியங்களை குறிக்கும். நமது பெயர் என்பது நமது அடையாளம் மட்டுமல்ல அது நமது குணங்களின் பிரதிபலிப்பும் ஆகும். உண்மைதான் நம்முடைய ஒவ்வொருவருடைய பெயரின் முதல் எழுத்திற்கும் ஒரு அர்த்தமும், சக்தியும் உண்டு. இந்த பதிவில் உங்கள் பெயர் தொடங்கும் எழுத்தை பொறுத்து உங்களின் பண்புகள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

A
மற்றவர்கள் நீங்கள் முரட்டுத்தனம் மிக்கவர்கள் எனவும், திமிரு பிடித்தவர்கள் எனவும் நினைப்பார்கள், ஆனால் உங்களுக்கு வாழ்க்கையில் என்ன தேவை என்பதில் தெளிவாக இருப்பீர்கள். அனைத்திலும் முதல் இடத்தில இருக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். புத்திசாலித்தனம், நகைசுவை உணர்வு போன்றவை உங்களை கவரும், குறிப்பாக மற்றவர்களின்வெளிப்புற தோற்றத்திற்கும் முக்கியத்துவம் வழங்குவீர்கள். நீங்கள் மிகவும் எதார்த்தனமான அதேசமயம் தெளிவான முடிவுகளை எடுப்பவர்கள்.

B
நீங்கள் மிகவும் தனிப்பட்ட நபராக இருப்பீர்கள் உங்கள் வாழ்க்கையை மிகவும் இரகசியமாக வைத்திருப்பீர்கள். பரிசுகளை பரிமாறிக்கொள்வதில் அதிக ஆர்வம் உள்ளவர்கள். நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட கூடியவர்கள், உங்களின் உணர்வுகளை மற்றவர்கள் மதிக்க வேண்டுமென விரும்புபவர்கள். நீங்கள் விரும்புவதெல்லாம் அன்பான ஒரு துணையைதான்.

C
உங்களை சுற்றி நிறைய பேர் இருக்க வேண்டுமென விரும்பும் சமூக விரும்பி நீங்கள். நீங்கள் செய்யும் அனைத்து காரியங்களையும் இந்த சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென நினைப்பீர்கள். உங்களின் வாழ்க்கைத்துணை வசீகரமானவர்களாய் இருக்கவேண்டுமென விரும்புவீர்கள். உங்களை மதிப்பவர்களை உங்களுடன் எப்போதும் வைத்துக்கொள்ள விரும்புவீர்கள். உங்கள் கனவுகள் மற்றும் ஆசைகள் மீது பலமான கட்டுப்பாடு இருக்கும்.

D
மற்றவர்கள் உங்களை அதிக பிடிவாதம் மிக்கவர்களாக நினைக்கலாம். ஆனால் பிடித்ததை அடைய அணைத்து முயற்சிகளையும் எடுப்பது உங்களின் பிறவி குணம். மற்றபடி நீங்கள் மென்மையான மற்றவர்கள் மீது அக்கறை உள்ள நபர். நீங்கள் உறவுகளில் நேர்மையாகவும், நெருக்கமாகவும் இருப்பீர்கள்.

E
நீங்கள் மூளையை நம்பி வாழ்பவர்கள். எனவே அதற்கு சிறந்த உணவாக நல்ல உரையாடல்களும், புத்தகங்களும் தேவை. நீங்கள் நிறைய பேசுபவர்கள் மற்றும் அதற்கு நல்ல கேட்போரை விரும்புவீர்கள். புத்தங்கள்தான் உங்கள் சிறந்த நண்பர். நீங்கள் கடலை போடுவதில்சிறந்தவராக இருப்பீர்கள்.

F
நீங்கள் சிறந்த சிந்தனை உள்ளவர்களாகவும் காதலில் சிறந்தவர்களாகவும் விளங்குவீர்கள். உங்கள் துணையிடம் இருந்து நம்பிக்கை மற்றும் நேர்மையை எதிர்பார்ப்பீர்கள். பகற்கனவு காண்பதை வழக்கமாக கொண்டிருப்பீர்கள்.

G
நீங்கள் அனைத்திலும் பரிபூரணமாக இருக்க விரும்புவீர்கள் அதையே உங்கள் துணையிடமும் எதிர்ப்பார்ப்பீர்கள். நீங்கள் மிகவும் சுறுசுறுப்பானவர்கள் எப்பொழுதும் சோர்வடையமாட்டீர்கள். உங்களை போலவே இருக்கும் நபர்களுடன் பழக விரும்புவீர்கள். உங்கள் அன்பை வெளிப்படுத்த மிகுந்த சிரமப்படுவீர்கள்.

H
வாழ்க்கையை மிகவும் ரசித்து, அனுபவித்து வாழக்கூடியவர்கள் நீங்கள். மற்றவர்களின் நல்ல மற்றும் கெட்ட நேரம் இரண்டிலுமே அவர்களுக்கு பக்கபலமாய் நீங்கள் நிற்பீர்கள். உங்கள் வாழ்கையை பற்றிய நிறைய கனவுகளை கொண்டிருப்பீர்கள்.

I
நீங்கள் ஆடம்பரத்தை விரும்புவீர்கள், மற்றவர்களிடம் இருந்து பாராட்டை பெற விரும்புவீர்கள். நீங்கள் எளிதில் கவலை அடையக்கூடியவர்கள், ஆனால் உங்கள் நேர்மை உங்களின் வலுவான குணம் அல்ல. உங்கள் வாழ்க்கையில் பல சோதனை முயற்சிகளை செய்வீர்கள்.

J
நீங்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பான மற்றும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பீர்கள். மற்றவர்கள் கனவு காணும் ஒரு காதலனாக இருப்பீர்கள். தொலைதூர உறவுகளை கையாளுவதில் நீங்கள் சிறந்தவர்கள். நீங்கள் விரும்புவர்களை அன்பாக பார்த்துக்கொள்வதில் வல்லவர்கள்.

K
அதிக சிந்தனை திறனும், கூச்ச சுபாவமும் உள்ளவர்களாக இருப்பீர்கள். நீங்கள் செய்யும் செயல்களில் உறுதியாக இருப்பீர்கள் மற்றவர்களை முட்டாளாக்க நினைக்கமாட்டிர்கள். நீங்கள் சிறந்த நண்பர் மற்றும் காதலராக இருப்பீர்கள்.

L
நீங்கள் மிகவும் காதலில் ஆர்வம் மிக்கவர்கள் உங்கள் துணை உங்களுக்கு மிகவும் முக்கியமானவர்கள். உங்கள் உறவில் சிறப்பாக இருக்க உங்கள் துணையின் தோற்றம் மிக முக்கியமென விரும்புவார்கள். உங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் நீங்கள் சிறந்தவர்கள்.

M
நீங்கள் கூச்சசுபாவம் மிக்கவர்களாகவும், அப்பாவியாகவும் காட்சியளிப்பீர்கள். நீங்கள் அனைத்தும் சரியாக இருக்க விரும்புவீர்கள் மற்றவர்களிடமும் அதையே எதிர்பார்ப்பீர்கள். எப்பொழுதும் அனைத்திலும் வெற்றிபெற வேண்டும் என்று நினைப்பீர்கள் ஒருபோதும் பின்வாங்கமாட்டிர்கள்.

N
சிறந்த ஆளுமைத்திறன் மற்றும் உணர்ச்சிவசப்பட கூடியவராக இருப்பீர்கள். உங்களை போன்ற தன்னலம் இல்லாதவர்களை பார்ப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. நீங்கள் விரும்புபவர்களுக்காக அனைத்தையும் விட்டுகொடுப்பீர்கள். புத்திசாலியான அதேசமயம் கற்பனைத்திறன் மிக்கவர்களாக இருப்பீர்கள்.

O
நீங்கள் வேடிக்கையை அதிகம் விரும்புபவர் ஆனால் உங்கள் ஆசைகளை வெளியே காட்டிக்கொள்ள மாட்டீர்கள். மிகவும் நேர்மையான நீங்கள் அதே நேர்மையை மற்றவர்களிடமும் எதிர்பார்ப்பீர்கள். மிகவும் பொறுமையான, காதலான நபரான உங்களுக்கு உங்களின் காதல் உணரசு பல சமயம் பொறாமையாக மாறக்கூடும்.

P
மற்றவர்கள் உங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் அதிக கவனம் செலுத்துபவர் நீங்கள். உங்களின் இமேஜ் மற்றும் பெயரே உங்களுக்கு மிகவும் முக்கியமானது. அதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வீர்கள். அதற்காகவே நீங்கள் அழகான துணை கிடைவேண்டுமென்று விரும்புவீர்கள். மற்றவரின் புதிசாலித்தனம் உங்களை எளிதில் ஈர்க்கும். நட்பான, அதிகம் பேசக்கூடியவராக இருப்பீர்கள்.

Q
அதிக ஆற்றல் நிறைந்த நீங்கள் எப்பொழுதும் புதிய முயற்சிகளை செய்ய விரும்புவீர்கள். உங்கள் துணையின் மகிழ்ச்சிக்காக எதைவேண்டுமென்றாலும் செய்ய தயங்கமாட்டிர்கள். உங்கள் தனி உலகத்தில் எப்போதும் சிறகடிக்க விரும்புவீர்கள்.

R
மற்றவர்களுக்கு நீங்கள் சுயநலம் மிக்கவர்களாக தெரிந்தாலும் மனதளவில் நீங்கள் சுயநலம் அற்றவராகத்தான் இருப்பீர்கள். விமர்சனங்களை எதிர்கொள்ள நீங்கள் ஒருபோதும் தயங்கமாட்டிர்கள். வலிமையான உடலை விட கூர்மையான மூளையே உங்களை வசீகரிக்கும்.

S
நீங்கள் ஒரு சிறந்த நண்பர் என்று மற்றவர்கள் எளிதில் நம்பிவிடுவார்கள். வலிமையான சிந்தனை உள்ள நீங்கள் ஒருபோதும் உங்கள் உணர்ச்சிகளை எல்லைமீற அனுமதிக்க மாட்டிர்கள். ஒரு முடிவெடுத்துவிட்டால் ஒருபோதும் அதிலிருந்து பின்வாங்க மாட்டிர்கள். சிலசமயம் நீங்கள் சுயநலம் மிக்கவர்களாக இருக்கலாம் ஆனால் பெரும்பாலான நேரங்களில் தாராளமனப்பான்மையுடன் இருப்பீர்கள். தானம் வழங்க யோசிக்கமாட்டிர்கள் ஆனால் அதுவே உங்களின் பலவீனமாகவும் அமையும். அனைவரையும் கவரும் இனிமையான குணம் உடையவர் நீங்கள்.

T
நீங்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். உங்கள் வாழ்க்கையில் எப்போதும் உங்களுக்கான தனிவழியில் வாழ நினைப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் மற்றவர்கள் தலையிடுவதை விரும்பமாட்டிர்கள். எளிதில் மற்றவர்களிடம் பேசிப்பழக கூடியவர்கள். ஒருவேளை காதலிப்பவராக இருந்தால் நீங்கள் அதில் நேர்மையாக இருப்பீர்கள். மற்றவர்களின் பேச்சையும் சில விஷயங்களில் கேட்பது உங்களுக்கு நல்லது.

U
மிகவும் உற்சாகமான மற்றும் மகிழ்ச்சியான நபர் நீங்கள். காதல் உணர்வை மிகவும் மதிப்பவர் நீங்கள். அதிக பயணம் செய்ய விரும்புபவர் மற்றும் த்ரில் அனுபவங்களை விரும்புபவர். பரிசு கொடுக்கவும், வாங்கவும் அதிக விருப்பம் உடையவர்கள். மற்றவர்களின் உணர்வைவிட உங்கள் உணர்வை மேலாக நினைப்பீர்கள்.

V
உங்களை விரும்புபவர்களுக்கு நீங்கள் பெரும்பாலும் சுயநலம் மிக்கவர்களாக காட்சியளிப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் மற்றவர்களின் குறுக்கீட்டை அனுமதிக்கமாட்டிர்கள். மற்றவர்களை விட தான் எப்பொழுதும் வித்தியாசமானவர் என்ற உணர்வு உங்களுக்கு இருக்கும். உங்களுக்கான இடைவெளியை தரும் துணை கிடைத்தால் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

W
உங்களை நினைத்து நீங்களே எப்பொழுதும் பெருமைப்படுவீர்கள். இல்லை என்ற பதிலை நீங்கள் ஒருபோதும் விரும்பமாட்டிர்கள். மற்றவர்கள் மீது அதிக அக்கறை செலுத்துபவர்கள். காதல் என்று வரும்போது மிகவும் ரசனையாக காதலிக்க கூடியவர் நீங்கள்.

X
மிகவும் உற்சாகமான நீங்கள் எளிதில் ஆர்வமிளக்க கூடியவர். பன்முக திறமை கொண்ட நீங்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யக்கூடியவர்கள். அதிகம் பேசக்கூடிய உங்களுடன் நேரம் செலவிட அனைவரும் விரும்புவார்கள்.

Y
அதிக சுதந்திர உணர்வு உள்ள நீங்கள் அனைத்தையும் உங்கள் சொந்த வழியில் செய்யக்கூடியவர்கள். உங்கள் உணர்ச்சிகள் மீது மிகுந்த கட்டுப்பாடு கொண்ட நீங்கள் எப்போதாவது அதனை வெளிப்படுத்துவீர்கள். நீங்கள் சிறந்தவர் என நிரூபிக்க தொடர்ந்து முயற்சி எடுத்துக்கொண்டே இருப்பீர்கள்.

Z
கடைசி எழுத்தை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்கள் சிறப்பான குணங்களை உடையவராக இருப்பீர்கள். உங்கள் வாழ்வில் மற்ற விஷயங்களை விட காதல் அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கும்.