சரவணன் மீனாட்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான தொடர். கடந்த 2011ம் ஆண்டு முதல் தற்போது 3வது சீசனாக ஒளிபரப்பாகி வருகிறது. சரவணன் மீனாட்சி சீரியலின் முதன் பகுதியில் செந்தில் மற்றும் ஸ்ரீஜா இருவரும் இணைந்து நடித்து அந்த கதாபாத்திரத்திற்கே ஒரு முத்திரையை பதித்தனர். இதைத்தொடர்ந்து கடந்த சீசனில் சரவணன்-மீனாட்சி என்ற சீரியலில் இரண்டாவது நாயகியாக நடித்தவர் காயத்ரி. இவர் இப்போது அரண்மனை கிளி என்ற சீரியலில் ஒரு முக்கிய நடிகையாக நடித்து வருகிறார்.
இவர் சரவணன்-மீனாட்சி சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சங்கர பாண்டி என்பவருடன் ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்தார். அந்நிகழ்ச்சியின் நடன பயிற்சிக்கு காயத்ரி வரும்போது பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் அவரின் கை எலும்புகள் உடைந்துள்ளது.இந்த தகவலை நடன நிகழ்ச்சியில் சங்கரபாண்டி அறிவிக்க அதோடு அவரின் கையில் எலும்பு எப்படி உடைந்துள்ளது என்ற புகைப்படத்தையும் ஒரு நிகழ்ச்சியில் வெளியிட்டுள்ளனர் புகைப்படம் இதோ.