திரைப்பட நடிகை , சின்னத்திரை நடிகை, தயாரிப்பாளர், ராடன் மீடியா நிறுவனர் என பன்முகதிறமை கொண்டவர் நடிகை ராதிகா இந்நிலையில் நடிகை ராதிகாவின் மகள் ரேயானுக்கு அண்மையில் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தையின் பெயரை ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதன் படி தனது மகளுக்கு ராத்யா மிதுன் ( Radhya Mithun) என்று பெயர் வைத்துள்ளார். இந்த பதிவில், ”என் மகள் ராத்யா மிதுனை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். நீ தைரியமானவளாக அசாதாரணமானவளாக வளர வேண்டும் என விரும்புகிறேன். இவளது பெயர் எனக்கு உயிர் கொடுத்தவரிடம் இருந்து வந்தது.
அவரைப் போல இவளும் சாதனைகள் பல புரிவாள்” என்று தெரிவித்தார். இதற்கு ராதிகா சரத்குமார் பேபி டால் என்று கமெண்ட் செய்திருந்தார். தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த பதிவு இதோ
Baby doll❤️❤️❤️❤️ https://t.co/HMc2p6TQeV
— Radikaa Sarathkumar (@realradikaa) April 10, 2020