பொள்ளாச்சியில் மற்றொரு பாலியல் நாதாரி! அந்தரங்க போட்டோக்கள் எடுத்து பெண்களுக்கு மிரட்டல்!

பொள்ளாச்சியில் ஆபாச வீடியோ கும்பல் தொடர்பான அதிர்ச்சி அடங்குவதற்குள் பல பெண்களை காதலிப்பதுபோல பழகி ஏமாற்றிய மற்றொருவன் காவல்துறையில் சிக்கியுள்ளான் பொள்ளாச்சியை அடுத்த நாதே கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்தவன் பாலச்சந்திரன். தனியார் பேருந்து நடத்துனரான இவன் மீது நெகமத்தைச் சேர்ந்த ஒரு பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பாலச்சந்திரன் ‘தன்னை உயிருக்கு உயிராக காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்வதாகவும் கூறியாதல் நெருங்கிப் பழகியதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார். இரண்டு முறை தான் கருவுற்ற நிலையில் அவன் வலுக்கட்டாயமாக பாலச் சந்திரன் கருவைக் கலைக்கச் செய்ததாகவும்.

அவன் எப்படியும் திருமணம் செய்துகொள்வான் என்ற நம்பிக்கையில் இருந்த தான் அவனது உண்மை முகம் தெரியத் தொடங்கிய போது அதிர்ச்சி அடைந்ததாகவும் அந்தப் பெண் தெரிவுத்துள்ளார். தன்னைப் போன்றே பேருந்தில் பயணித்த பல பெண்களை அவன் ஏமாற்றியது தெரியவந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தாங்கள் இருவரும் காதலித்த போது அவனை நம்பி தான் அனுப்பிய அந்தரங்க மெசேஜ்கள், மற்றும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வைத்து அவன் தன்னை மிரட்டுவதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

இதனிடையே புகார் கொடுத்த பெண்ணின் உறவினர்கள், பாலச்சந்திரன் அந்தப் பெண்ணிடம் பேசிய ஆடியோக்களையும் புகார் கொடுத்த பெண் பாலச்சந்திரனால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்களிடம் பேசும் ஆடியோக்களையும் வெளியிட்டுள்ளனர். ‘உன்னால் என் வாழ்க்கையே நாசமாகிவிட்டதே என அந்தப் பெண்கள் கதறும்போது உன்னால் முடிந்ததைச் செய்துகொள், என்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும்.

நீ இல்லாவிட்டால் உன்னைவிட அழகான ஒருத்தியிடமும், அவளும் இல்லாவிட்டால். அவளை விட அழகான மற்றொருவளுடனும் செல்வேன் என்று கூறும் அவன் அந்தப் பெண்களின் சாதியைச் சொல்லி தரக்குறைவாகவும், வக்கிரமாகவும் பேசுவதும் பதிவாகியுள்ளது. பாலச்சந்திரனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.