தமிழ் சினிமாவில் ஜீவா நடித்த கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.அந்த படத்தில் இவர் பார்ப்பதற்கு சின்ன பெண்ணாகத்தான் தெரிந்தார். ஆனால் சில ஆண்டுகளாக உடல் எடை கூட சற்று பருமனானார். தமிழ் நடிகைகள் என்றாலே கொஞ்சம் பூசினாற் போல தான் இருப்பார்கள். அதிலும் சில நடிகைகள கொளுக்கு மொழுக்கு என இருப்பார்கள். அதில் ஒருவர் தான் நடிகை அஞ்சலி. கொளு கொளுவென மெழுகு சிலையாக இருக்கும் இவருக்கென தமிழ் சினிமாவில் தனி இடம் உண்டு. சமீப காலமாக தயாரிப்பாளருடன் பிரச்சனை, பிரபல நடிகருடன் காதல், சித்தியுடன் பிரச்சினை என அஞ்சலி பல பிரச்சினைக்கு ஆளாகினர்.
தமிழ், தெலுங்கு என பல படங்களில் கலக்கி வந்தார் அஞ்சலி. தமிழில் நடிகர் ஜெய் உடன் எங்கேயும் எப்போதும் என்ற படத்தில் நடித்தபோது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்ததாக பேசப்பட்டது. அதுமட்டுமில்லாமல் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் இரண்டில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடினார், அதனால் தொடர்ந்து ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடும் நடிகையாக மாறினார் இப்படியே போனால் நடிகை வாய்ப்பு பறிபோய்விடும் என எண்ணி அஞ்சலி மீண்டும் ஹீரோயினாக மட்டுமே நடிப்பது என முடிவு எடுத்தார்.
சமூக வலைத்தளங்களில் அஞ்சலி எப்போதும் ஆக்டிவாக இருப்பார் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம், தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதிலும் தனி அக்கறை காட்டுவார், இந்த நிலையில் ஜிம் யோகா என தினமும் உடற்பயிற்சி ஈடுபட்டு வரும் அஞ்சலி தற்போது போதிதருமர் போல் போஸ் கொடுத்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.