கடந்த ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு பிறகு அதிகம் பிரபலமடைந்தவர் ரைசா தான்.மாடலிங் துறையில் இருந்த இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக, விளம்பரங்கள், படங்கள் என்று வாய்ப்புக்கள் இவரை தேடி வந்தது. சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வி ஐ பி- 2 படத்தில் கூட கஜோலுக்கு உதவியாளராக நடித்திருந்தார்.
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மற்றுமொரு போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன், பியார் பிரேமா காதல் என்ற படத்திலும் நடித்திருந்தார்.பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை நடிகை ரைசா மேக்கப்பிற்கு மட்டுமே பெயர் போனவராக இருந்து வந்தார். இந்நிலையில் நடிகை ரைசா, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேளை சாப்பிட்டுக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் ரைசாவின் இந்த உணவு பழக்கத்தை கண்டு முகம் சுழித்துள்ளனர்.