மகனை துடிக்க துடிக்க தூக்கில் தொங்கவிட்ட தந்தை! வீடியோ எடுத்த மகள்! நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!

45 வயது நபர் ஒருவர் தனது சீட்டு நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மகனை சீலிங் பேனில் தொங்கவிட்டு கொலை செய்ய அதனை அவரது மகள் செல்போனில் வீடியோ பதிவு செய்த திடுக் சம்பவம் அரங்கேறியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த 45 வயது சுரேஷ், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் குடும்பத்தோடு தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். இதற்காக முதலில் அவருடைய மனைவி கீதா, மகன் வருணை கொலை செய்துள்ளார். முதலில் தனது 38 வயது மனைவி கீதாவைகொன்றவர். பின்னர் தனது 12 வயது மகன் வருணை அவரது கழுத்தில் போர்வையைச் சுற்றி சீலிங் பேனில் தொங்கவிட்டுள்ளார்.

இதனால் கழுத்து இறுக்கி அந்த சிறுவன் மரணம் அடைந்துள்ளான். அந்தச் சிறுவனும் எவ்வித ஓசையும் எழுப்பாமல் இறப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். இந்தச் சம்பவத்தைப் பார்த்த அவரது 17 வயது மகள் கதறியபடியே இதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்நிலையில் அருகில் அழுகுரல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனே ஓடி வந்து பார்த்தபோது நடந்த கொடூரம் குறித்து 17 வயது இளம் பெண் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு காவலர்கள் வந்துள்ளனர். போலீஸாரிடம் அந்த நபர் அளித்த வாக்குமூலத்தில், “எனக்கு 45 வயதாகிறது. நான் ஒரு சிட் ஃபண்ட் நிறுவனம் நடத்தி வந்தேன். அதில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது. அதனால், குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்தோம்.

என் மனைவி, மகனைக் கொலை செய்தேன். ஆனால், என் மகள் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துவிட்டார்” என்றார். இதையடுத்து போலீசார் அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தை ஏற்று அந்த நபரை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடந்தி வருகின்றனர்.