மகளை துடிக்க துடிக்க கொலை செய்துவிட்டு தாயும் தந்தையும் தற்கொலை! அதிர வைக்கும் காரணம்!

சேலம் மாவட்டம் பூலாவரி அருகே ஆத்துக்காடு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பூலாவாரியை அடுத்த ஆத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது43). சேலம் பகுதியில்  தனியார் நிறுவனத்தில்  ஓட்டுனராக  பணியாற்றி வந்துள்ளார்.இவரது மனைவி சாந்தி (35). இவர்களுக்கு மகள் ரம்யா (17) . இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மகன் தீனா (17) பிளஸ்-2 படித்து வருகிறார்.  இந்நிலையில் நேற்று இரவு மகன் தீனாவை மட்டும் அவரது பாட்டி வீட்டில் சென்று தூங்குமாறு ராஜ்குமார் அனுப்பியுள்ளார். இன்று காலை 7 மணியளவில் தீனா மீண்டும் தனது வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீடு  பூட்டி இருந்தது. இதை பார்த்த அவர் வீட்டு கதவை தட்டியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை.இதனால் சந்தேகம் அடைந்த தீனா உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்களும் வந்து தட்டிப்பார்த்தும் கதவு திறக்கப்படாததால் பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ராஜ்குமார், சாந்தி மற்றும் ரம்யா ஆகியோர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.இதனைத்தொடர்ந்து தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த 3 பேரின் உடலையும் மீட்ட போலீசார் பிரதே பரிசோதனைக்காக உடல்களை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அருகில் உள்ளவர்களிடம் அவர்கள் ஏன் தற்கொலை செய்து கொண்டனர்.அவர்கள் தற்கொலைக்கான காரணம் என்ன?. கடன் தொல்லையால் அவர்கள் தற்கொலை செய்தனரா?

அல்லது ஏதாவது மிரட்டல் காரணமாக தற்கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மாற்று சமுதாயத்தை சேர்ந்த இளைஞரை காதலித்ததால் மகளை கொன்று பெற்றோர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.