மகள் கேட்ட கேள்வியால் கூனிக்குறுகி உயிரைவிட்ட ரஜினிகாந்த்..! அப்படி என்ன கேட்டார் தெரியுமா? வெளியான பின்னணி

சென்னையில் மகள் கேட்ட ஒற்றை கேள்வியால் மனமுடைந்த ஆட்டோ ஓட்டுனர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.சென்னை துரைப்பாக்கம் ராஜீவ்காந்தி சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே மின்னல் வேகத்தில் வந்த ஆட்டோ மோதியதில் தேவதாஸ் என்பவர் பலியானர்.இதனால் பயந்து போன கண்ணகி நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரஜினிகாந்த், அந்த இடத்திலிருந்து ஆட்டோவில் தப்பினார். குடிபோதையில் இருந்த ரஜினிகாந்த்தை பொலிசார் மடக்கி பிடித்தனர்.அவரிடம் நடத்தப்பட்ட மது குடித்ததற்கான சோதனையில் அளவுக்கதிகமாக குடித்திருந்தது தெரியவந்தது.

ஆட்டோவுக்குரிய ஆவணங்களையும் டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை கொண்டுவரும்படி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு பொலிசார் ரஜினிகாந்த்திடம் தெரிவித்துள்ளனர். இதனால், அவர் வீட்டுக்குச் சென்றுள்ளார்.அப்போது அவரின் மகள்கள், ஏம்ப்பா இப்படி குடித்துவிட்டு ஆட்டோ ஓட்டி அந்த அங்கிளை கொன்னுட்டீங்க என்று கேட்டதாகச் சொல்லப்படுகிறது.

மேலும், ரஜினிகாந்த்தின் மனைவி சந்திரிகாவும் இந்த வழக்கில் நீங்கள் ஜெயிலுக்குப்போய்விட்டால் இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வேன் என்று கேட்டுள்ளார்.

இதனால் வேதனையடைந்த ரஜினிகாந்த் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் ரஜினிகாந்த் சடலத்தை கைப்பற்றிவிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.