மதுரை பள்ளி வளாகத்திலேயே அசிங்கம்…! 12ம் வகுப்பு மாணவனால் கர்ப்பமான மாணவி…!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிறுமியை கருவுறச் செய்த 12-ஆம் வகுப்பு மணவனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கல்வி கற்க பள்ளிக்கு அனுப்பினால் கலவி கற்ற மாணவன் மற்றும் மாணவியின் கதை இது. கொட்டாம்பட்டி அருகே உள்ள ஒரு இடத்தைச் சேர்ந்தவர்கள் அந்த மாணவனும், மாணவியும். அரசுப் பள்ளி ஒன்றில் அந்த மாணவியைச் சேர்த்த போது தெரியவில்லை அந்த மாணவியின் பெற்றொருக்கு; தங்கள் மகளின் வாழ்க்கை திசை மாறிப் போகப் போகிறதென்று. ஒருநாள் அந்தச் சிறுமியின் 8 மாதக் கரு வெளியில் தெரியவந்தபோதுதான் அவள் தன்னையும் வஞ்சித்துக் கொண்டு தங்களையும் வஞ்சித்துவிட்டது பெற்றோருக்கு தெரியவந்து.

அதுவரை மகள் என்ன செய்கிறாள் என்பதைக் கவனிக்க துளி கூட அக்கறை இல்லாமல் இருந்து விட்ட பெற்றோர் அதன் பிறகு தலையில் அடித்துக் கொண்டு குதிக்கத் தொடங்கினர். குடும்ப மானம் காற்றில் பறந்துவிட்டதாக புலம்பினர். இது போன்ற சூழல்களில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடுகளில் நடைபெறும் வழக்கமான அர்ச்சனைகளுடன் கூடிய விசாரணையில் அந்தச் சிறுமியின் கருவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த அந்தச் சிறுமியின் பள்ளியிலேயே படிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவன் தான் காரணம் எனத் தெரியவந்தது. பள்ளிக் கூடக் கல்வி மனதில் பதிகிறதோ இல்லையோ இந்தக் காலத்து இளம் பிஞ்சுகளை கெடுத்துக் குட்டிச்சுவராக்குவதில் சினிமா மட்டுமே முக்கிய பங்கு வகித்த நிலை மாறி.

தற்போது அதன் குட்டிப் பிசாசுகளாக செல்ஃபோன், இணையதளம் உள்ளிட்டவற்றில் வண்ணக்கனவுகள் என்ற பெயரில் வரும் சீரழிவுப் பொழுதுபோக்குகளும் நாகரிகம் என்ற பெயரில் திணிக்கப்படும் அறியாமையும் குழந்தைகளை பாழ்படுத்த போட்டியிட்டு வரிசை கட்டி நிற்கின்றன. அந்த வகையில் பள்ளிக்கு கல்வி கற்கப் போன இரு சின்னஞ்சிறுசுகளும் அங்கு சந்தித்து இங்கு சந்தித்து – அங்கு மறைந்து இங்கு மறைந்து செய்த தவறுகள் சில மாதங்களில் பூதாகரமாக வெளியே வந்தது. சிறுமியின் வயிறு வெளியே தெரியும் வரை பொறுப்பற்ற பெற்றோருக்கு எதுவும் தெரியவில்லை. வெளியே தெரிந்தபோது தவறைத் திருத்திக் கொள்வதற்கான கால அவகாசம் கையை மீறிப் போயிருந்தது.

பிறகென்ன சிறுமியின் பெற்றோர் மாணவனின் பெற்றோரிடம் தகராறு செய்தனர் – கெஞ்சினர் – மிஞ்சினர். இருந்தும் என்ன பலன் தவறு செய்த அந்த மாணவனும் அவன் பெற்றோரும் சமூகச் சூழல் தந்த தைரியத்தில் அலட்சியாமகவும். திமிராகவுமே பதில் அளித்தனர். மாணவனும் அவனது தந்தையும் சிறுமியையும் அவளது தந்தையையும் அவதூறாகப் பேசியதோடு மிரட்டல் விடுக்கவும் செய்தனர்.

இதையடுத்து சிறுமியின் தந்தை கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் பேரில் மாணவன் மீது போக்சோ மற்றும் அச்சுறுத்தல் ஆகிய பிரிவுகளிலும், அவனது தந்தை மீது அச்சுறுத்தல் என்ற பிரிவிலும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.