மனித உருவில் பிறந்த ஆட்டுக்குட்டி…. மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சிக் காரணம்

தமிழகத்தில் ஆடு ஒன்றின் வயிற்றில் மனித உருவில் குட்டி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சிமாவட்டத்திலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த நல்லவன்னிப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி கோவிந்தராஜ். இவர் தனது வீட்டில் ஆட்டுப்பண்ணை வைத்து ஆடுகளை பராமரித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் வளர்த்த ஆடு, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கரு உண்டான ஆடு குட்டி போடமால் இருந்துள்ளது.இந்நிலையில், இன்று காலை குறித்த ஆடு ஒரு மனித உருவில் ஆட்டு குட்டி ஈன்றுள்ளது.இதை பார்த்து விவசாயி கோவிந்தராஜ் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர், சில நிமிடங்களுக்கு பிறகு குட்டி இறந்துள்ளது

அந்த குட்டி பாதி மனித உருவத்திலும், பாதி மிருக உருவத்திலும் உள்ளது. ஆனால் பிறந்த சில நிமிடங்களில் அந்த ஆட்டுக்குட்டி உயிரிழந்தது. இதை கண்ட அந்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து ஆய்வு செய்ய அரசு தரப்பிலிருந்து அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் சென்றனர். பின்னர் ஆய்வு செய்ததில் கரு முழு உருப்பெறாததே இதற்கு காரணம் என கால்நடை மருத்துவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பார்க்கவும்