மனைவியின் துரோகம், அன்பு குழந்தைகளின் இழப்பு, ஈடில்லா பெரும் துயரத்தில் வாடிய விஜய்க்கு அதிரடியாக வழங்கப்பட்ட புதிய பதவி

கள்ளக்காதலனுடன் வாழ தன் இரு குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்ற அபிராமியின் கணவர் விஜய்க்கு நடிகர் ரஜினிகாந்த் தனது கட்சியில் ஒரு முக்கிய பதவியை கொடுத்துள்ளார். சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமி என்ற பெண் சுந்தரம் என்பவருடன் நீண்டநாட்களாக கள்ளக்காதல் கொண்டுள்ளார்.மேலும் அவருடன் வாழ ஆசைப்பட்டு இடையூறாக இருப்பார்கள் என எண்ணி தன் இரு குழந்தைகளையும் பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தார்.

பின்னர் தனியார் வங்கியில் பணிபுரியும் தனது கணவரை விட்டு சுந்தருடன் ஓடினார்.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி அனைவரையும் பதற வைத்துள்ளது .மேலும் அபிராமிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோப குரல் ஒலித்து வருகிறது.இவ்வாறு மனைவியின் துரோகத்தாலும்,தான் ஆசையாய் வளர்த்த தன் இரு பிஞ்சு பிள்ளைகளையும் இழந்து அபிராமியின் கணவர் விஜய் பெரும் துயரத்தில்அவதிப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் விஜய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளும் ரஜினியின் தீவிர ரசிகர் என்று சமூகவலைதளங்களில் வெளியானது. இதனை அறிந்த ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் அபிராமியின் கணவன் விஜய்யைத் தொடர்பு கொண்டு தன்னை சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

பின் அவரது அழைப்பை ஏற்று போயஸ் தோட்ட இல்லத்தில் நடிகர் ரஜினியை விஜய் சந்தித்தார்.அங்கு மீளா துயரத்தில் வாடிவரும் விஜய்க்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார். மேலும் இந்த நிலையில் விஜய், ரஜினி மக்கள் மன்ற ஒன்றிய இளைஞரணி இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரஜினியின் ஒப்புதலுடன் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் அறிவிப்பு தெரிவித்துள்ளார்.