மனைவியை இவ்ளோ கொடூரமாக கொலை செய்ய முடியாம..? இப்படி ஒரு கொலையை நினைச்சிக்கூட பார்க்க முடியாது.

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா பகுதியைச் சேர்ந்தவர் துர்கா பாய். 35 அவரின் கணவர் ஹால்கேரம் குஷ் வாஹா(38) இவர்களுக்கு தேஜு ராம் பள்ளி மாணவர்.இந்நிலையில் நேற்று இரவு துர்கா பாய் அவரின் வீட்டில் முகம் முழுக்க ‘பிசின்’ பூசப்பட்டு, கண், மூக்கு, வாய் ஆகியவை பிசினால் இறுக்கமாக ஒட்டப்பட்ட நிலையில், இறந்து கிடந்துள்ளார். இந்தக் கொடூர கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து கொலையாளி கணவனை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இது தொடர்பாக கோத்வாலி பகுதி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஆர்.என்.ஷர்மா கூறுகையில், “கொலை செய்யப்பட்ட துர்காபாய் தனது கணவரால் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதற்கு ஆதாரங்கள் சிக்கியுள்ளன.அவரின் கணவர் ஹால்கேரம் குஷ் வாஹா இப்போது தலைமறைவாகியுள்ளார். அவரது மகனே தந்தை மீது புகார் கொடுத்துள்ளார்.

ஹால்கேரம் குஷ் வாஹாவை கைது செய்ய தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடிவருகிறோம். விரைவில் கைது செய்யப்படுவார்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஷர்மா கூறுகையில், “வீட்டின் படுக்கையில் துர்கா பிணமாகக் கிடந்துள்ளார். அதனை வெளியில் சென்று வந்த அவரின் 15 வயது மகன் பார்த்து அதிர்ச்சியடைந்த நிலையில், போலீசில் புகார் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே துர்காவுக்கு குஷ் வாஹா விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டில் கணவரின் முகத்தில் இதேபோல பிசின் பூசி, கண், மூக்கு, வாய் பகுதிகளை அடைத்து கொலை செய்ய துர்கா முயன்றார் என்றும் புகாரில் உள்ளது.” என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தி மற்றும் ஹாலிவுட் சினிமா படங்களையே மிஞ்சும் அளவுக்கு கொலை நடந்துள்ளது. இந்தக்கொடூர கொலை மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.