இந்தியாவில் வயிற்றுவலியால் துடித்த நபர் ஒருவர் வயிற்றிலிருந்து 8 ஸ்பூன்ஸ், 2 ஸ்க்ரூ டிரைவர், 2 டூத் பிரஷ், 1 கத்தி அகற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சல பிரதேசம் மாண்டி நகர் அரசு மருத்துவமனைக்கு மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை வயிற்றுவலி என்று அவரது குடும்பத்தார் அழைத்துச் சென்றுள்ளனர்.
மருத்துவர்கள், அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றுக்குள் 8 ஸ்பூன்ஸ், 2 ஸ்க்ரூ டிரைவர், 2 டூத் பிரஷ், 1 கத்தி இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால், அதிர்ந்துபோன மருத்துவர்கள், குடும்பத்தாரிடம் இது எப்படி நிகழ்ந்தது என்று கேள் எழுப்பியுள்ளனர்.
அவர்களிடமிருந்து எந்த பதிலும் வராததால், இதற்கு மேலும் பொறுமைக்காத்தால் ஆபத்தாகிவிடும் என்று எண்ணி உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்துள்ளனர்.
இதையடுத்து அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததோடு, நோயாளியும் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து டாக்டர் நிகில் கூறும்போது, வயிற்றுக்குள் இத்தனை பொருட்கள் இருந்ததைப் பார்த்ததுடன் அதிர்ந்து விட்டோம்.
அதனால் உடனடியாக எங்கள் மருத்துவக் குழு அறுவை சிகிச்சை செய்து அதை நீக்கிவிட்டோம். சாதாரணமான மனிதர்கள் கத்தி, ஸ்குரூடிரைவர், ஸ்பூன்களை விழுங்க மாட்டார்கள்.
ஆனால் நோயாளி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் இது நடந்துள்ளது. இது அரிதான ஒன்றாகும்’ என்றார்.