நேற்று செல்ஃபி எடுத்த பையனை அடித்த நடிகர் சிவகுமார் ஒரே சம்பவத்தில் தனது ஸ்டார் மகன்கள் சூர்யா, கார்த்தியை விட பிரபலமாகிவிட்டார். ஒரு தொந்தரவும் செய்யாமல் ஓரமாக நின்று செல்ஃபி எடுத்த பையன் மீது சிவக்குமார் அவ்வளவு பாய்ந்ததற்கு காரணம் மருமகள் ஜோதிகாதான் என்பது இப்போது தெரியவந்துள்ளது. மருத்துவமனை திறப்பு விழாவிற்கு முதலில் ஜோதிகாவைத் தான் அணுகியுள்ளார். ஜோதிகா வேறு ஒரு பட ஆடியோவில் இருந்ததால் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஜோதிகாவுக்குப் பதில் சூர்யாவையாவது அனுப்பலாம் என்று சிவகுமார் நினைத்தார்.
அந்த முயற்சியும் தோல்வியில் முடிய வேறு வழியின்றிதான் சிடுசிடு மூஞ்சியுடன் சிவகுமார் சென்றுள்ளார். சூர்யா, ஜோதிகா வராததால் மனதில் வருத்தம் இருந்தாலும், வேறு வழியின்றி மருத்துவமனை உரிமையாளர் சிவக்குமாரை வரவேற்று அழைத்து சென்றுள்ளனர்.அந்த இளைஞர் அதே மருத்துவமனையில் வேலை செய்து, மாத சம்பளமாக ஆறாயிரம் ரூபாய் வாங்குகிறாராம். மாதத்தவணை மூலம் பதினான்காயிரம் ரூபாய் மதிப்புள்ள போனை வாங்கியுள்ளார்.
மகன், மருமகள் மீது ஏதோ கோபத்தில் இருந்த சிவக்குமார் அவன் செல்ஃபி எடுக்க முயன்ற போது கோபத்தில் ஒங்கி அடித்து தட்டி இருக்கிறார். கருத்தரிப்பு மருத்துவமனை முதலாளி முதலில் திகைத்தாலும் பின்பு.
அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பேசாமல் ரிப்பன் கட் செய்து அவரை உபசரித்து அனுப்பியுள்ளார்.இந்த காரணத்தாலும் நடிகர் சிவக்குமார் இந்த செயலை செய்திருக்கலாம் என்று சில சினிமா வட்டாரங்களும் தெரிவித்துள்ளன.