மர்மமான முறையில் இறந்த இளம்பெண்.! உள்ளாடைக்குள் இருந்த மர்ம பொருள்! என்ன தெரியுமா?

இந்தியாவின் பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து கீழே விழுந்து இறந்த பெண்ணின் மரணத்தில் மர்மம் நீடிக்கிறது. அவினாஷ் அகர்வால் என்ற மருத்துவர் தனது மனைவி சோனா அகர்வாலுடன் வசித்து வந்தார். தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிறு மாலை சோனா அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியில் இருந்து கீழே விழுந்து பலியானார்.சோனா அகர்வால் உடலை பரிசோதனை செய்த போது அவரது உள்ளாடைக்குள் அமெரிக்க டொலர்கள், தங்க நகைகள், மற்றும் பக்கத்து வீட்டு சாவி ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் நடந்த அன்று பக்கத்து வீட்டில் இருந்து சோனா வெளியில் வந்ததாக அந்த வீட்டில் வசிக்கும் பிரசாத் என்பவரின் மாமனார் கூறியுள்ளார்.அதாவது, பிரசாத் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தபோதுதான் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். விநாயகர் சதுர்த்தி பூஜையை ஒட்டி பிரசாத்தின் மனைவி சோனாவை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். அக்கம்பக்கத்து பெண்களும் பிரசாத் வீட்டுக்கு சென்ற நிலையில் எல்லோரும் ஹாலில் உட்கார்ந்த நிலையில் சோனா மட்டும் பெட்ரூமில் உட்கார்ந்துள்ளார்.

அன்று மாலை முதல் பிரசாத்தின் வீட்டு சாவி காணாமல் போய்விட்டது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை பிரசாத் அந்த குடியிருப்பில் வசிக்கும் அனைவரும் மொட்டை மாடியில் கெட்டுகெதர் செய்துள்ளனர். இதில் சோனா பங்கேற்காத நிலையில், பிரசாத்தின் மாமனார் கெட்டு கெதருக்கு நடுவே திடீரென வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது பிரசாத் வீட்டுக்குள் இருந்து சோனா அகர்வால் வெளியே வந்துள்ளார். இதை பிரதாத் மாமனார் பார்த்துள்ளார்.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, சோனா தான் விநாயகர் சதுர்த்தி அன்று பிரசாத் வீட்டு சாவியை திருடியிருக்க வேண்டும். பின்னர் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் சென்று பொருட்களை எடுத்து உள்ளாடையில் வைத்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதை பிரசாத் மாமனார் பார்த்து விட்டதால் பயந்து ஓடும்போது மாடியில் இருந்து தவறி விழுந்தாரா அல்லது அவமானத்தால் தற்கொலை செய்தாரா அல்லது கீழே தள்ளிவிட்டு கொல்லப்பட்டாரா என பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.