மனித வாழ்க்கையின் ஏற்றம் – இறக்கம் எல்லாமே பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அமைகின்றன. பூர்வ புண்ணியத்திற்கான பலன்களை அளிப்போர் நவகிரகங்கள் எனப் போற்றப் பெறும் நவநாயகர்களே ஆவர். இந்த ஒன்பது கிரகங்களில் ஐந்தாவதாக, நடு நாயகராகத் திகழ்பவர் குரு பகவான்.தேவர்களின் குருவாகிய குருபகவான் பூரணமான சுபகிரகம் ஆவார். குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு. அதனால் தான் ‘குரு பார்க்க கோடி நன்மை’, குரு பார்வை தோஷ நிவர்த்தி’ என்றெல்லாம் போற்றப்படுகிறார்.குருபகவான் ராசி மண்டலத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் காலம் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும்.
அதாவது, ஒரு ராசியைக் கடக்க ஓர் ஆண்டு ஆகிறது. குரு, சூரியன் இருவரும் கும்பத்திலும் சந்திரன் மகம் நட்சத்திரத்தில் சிம்ம ராசியிலும் இருக்கும் காலத்தில், மகா கும்பமேளா கொண்டாடப்படுகிறது.சரி வாருங்கள்…இந்த மஹா குருப்பெயர்ச்சியால் எந்த எந்த ராசிகளுக்கு என்ன என்ன பலன் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
எதையும் துணிவோடு எதிர்த்து நிற்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு 11-10-2018 முதல் ஜென்ம ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8 ஆம் இடத்திற்கு குரு பகவான் பெயர்ச்சியாகயிருப்பதால் உங்களின் பொருளாதார நிலையில் சில நெருக்கடிகளை சந்திக்க கூடிய சூழல் ஏற்படும். நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகளும் நீண்ட தடை தாமதத்திற்கு பின்பே உங்களுக்கு கிடைக்கும்.
வயிறு சம்பந்தமான நோய்கள், அஜீரணம் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். வாழ்க்கை துணைக்கும் உடல் நலக் குறைபாடு ஏற்பட்டு செலவுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சனிபகவான் 9 ஆம் வீட்டில் இருப்பதால் வெளியூர் பயணங்களில் உங்களுக்கு ஆதாயம் ஏற்படும். தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படும் நிலை உருவாகக்கூடும்.
13-2-2019 அன்று ஏற்படவிருக்கும் ராகு மாற்று கேது பெயர்ச்சியால் உங்களுக்கு சாதகமான நிலைமை உண்டாகும். ஈடுபடும் எந்த ஒரு காரியத்திலும் கடின முயற்சிகளை மேற்கொண்டாவது வெற்றிபெறுவீர்கள். பரிச்சயமில்லாதவர்களிடம் பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் மிக பெரிய தொகையை ஈடுபடுத்தக்கூடாது. அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு பெறமுடியாவிட்டாலும் பதவி உயர்வுகளை பெரும் யோகம் உண்டு.
கோவில் சம்பந்தமான புனித காரியங்களில் ஈடுபட்டு கௌரவத்தையும் ஆண்டவனின் அருளையும் பெறுவீர்கள். குருபகவான் 8 ஆம் இடத்தில் இருந்தாலும் உங்கள் ராசிநாதனாகிய செவ்வாய் பகவானுக்கு நட்பு கிரகம் என்பதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் ஏற்படாது.
உங்கள் உடலை ஓய்வின்றி தொடர்ந்து வருத்திக்கொள்வதாலும், அடிக்கடி பயணங்களின் போது புதிய உணவுகளை உண்பதாலும் சிலருக்கு வயிறு சம்பந்தம்மான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உடல் அசதி அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களும் சில உடல்நலக்குறைவுகளால் பாதிக்கப்பட்டு மீள்வார்கள். குடும்பத்தில் வீண் விவாதங்கள் அவ்வப்போது ஏற்படலாம். உறவினர்களளோடு அனுசரித்து நடந்து கொள்வதின் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். வீட்டில் திருமண வயதை எட்டியவர்களுக்கு திருமணம் செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பல தாமதங்களுக்கு பிறகு வெற்றியடையும்.
உங்களுக்கு மறைமுக எதிரிகள் அதிகமாவார்கள். நீங்கள் கொடுத்த கடனை திரும்ப வசூலிப்பதில் பிரச்சனைகள் உருவாகலாம். புதிதாக தொடங்கப்படும் தொழில் வியாபார முயற்சிகளில் சிறிது கடிமான காலகட்டங்களை கடந்த பிறகே சிறந்த பலன்களை பெற முடியும். தொழில் வியாபாரங்களில் சக வியாபாரிகள் மற்றும் தொழில் முனைவோர்களின் மறைமுக எதிர்ப்புகள் போட்டி பொறாமைகளுக்கு ஆளாகும் நிலை ஏற்படும். உங்களுக்கு கீழ் பணிபுரியும் தொழிலார்கள், வேலையாட்கள் மூலமும் உங்களுக்கு சில பிரச்சனைகள் உருவாகக்கூடும்.
பணியிலிருப்பவர்கள் அதிகப்படியான வேலைப்பளுவை சுமக்க நேரிடும். புதிதாக வேலை தேடும் நபர்களுக்கும் பல விதமான அலைச்சல்கள் மற்றும் சங்கடங்களை சந்தித்த பிறகே நல்ல வேலை வாய்ப்பு அமையும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளின் பணிகளுக்கான முயற்சிகள் வெற்றியடையும். அரசியில் மற்றும் பொது வாழ்வில் இருபவர்களுக்கு வீண் வதந்திகள் மற்றும் கட்சியினரின் செயல்பாடுகளால் தர்ம சங்கடமான நிலை ஏற்படும். விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு வீண் விரயங்கள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.
அரசாங்கம் வழங்கும் பயிர்கடன்கள் சற்று தாமதத்திற்கு பின்பு கிடைக்கும். கலைத்தொழிலில் இருப்பவர்களுக்கு பொருளாதார நெருக்கடிகள் அதிகரிக்கும், கடன் வாங்க கூடிய சூழ்நிலை உருவாகும். பெண்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். பெற்ற பிள்ளைகள் வழியில் சற்று மன சங்கடங்கள் ஏற்படும். மாணவ -மாணவியர் கல்வியில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். தவறான நட்புகளால் அவப்பெயரை சம்பாதிக்கும் நிலையுண்டாகும்.
ரிஷபம்
தன்னை எப்போதும் அழகாக காட்டிக்கொள்வதில் அக்கறை கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு 11-10-2018 அன்று ரிஷப ராசிக்கு 7 ஆம் இடத்தில் குரு பகவான் பெயர்ச்சியாக இருப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தடைபட்டு கொண்டிருந்த காரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறும். புத்திர பேறில்லாமல் அவதிப்பட்டவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய வீடு, வீட்டு மனை மற்றும் அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். உடல் நலத்தில் அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மறையும்.
முன்கோபத்தை குறைத்து பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியமாகும். 13-2-2019 அன்று ஏற்பட இருக்கும் ராகு-கேது பெயர்ச்சிகளுக்கு பின்பு எல்லா வகையிலும் நன்மையான பலன்களை அதிகம் பெற முடியும். உறவினர்களிடையே சிறு கருத்து வேறுபாடுகளும் ஒற்றுமை குறைவுகளும் ஏற்படலாம். தொழில், வியாபாரங்களில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும்.
பெரும்பாலான காலம் உடல் நலம் நன்றாக இருக்கும் என்றாலும் அவ்வப்போது சிறிது நோய்வாய்ப்பட்டு மீண்டும் குணமாகும் நிலையிருக்கும். சொந்தக்காரர்கள் எவருக்கேனும் மருத்துவ உதவிகளை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். உணவு விடயங்களில் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். குடும்பத்தின் பொருளாதார நிலை நன்றாகவே இருக்கும். பொன், பொருள், ஆபரண சேர்க்கை உண்டாகும். புதிய வீடு மற்றும் புதிய வாகனங்களை வாங்கும் யோகம் நிறைவேறும். கடந்தகாலங்களில் வாங்கிய கடன்களை அடைத்துவிடுவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுபவர்கள் கொடுத்த தொகையை வட்டியுடன் திரும்ப பெறுவார்கள். நீதிமன்ற வழக்குகளில் தாமதங்கள் ஏற்பட்டாலும் வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும்.
தொழில், வியாபாரங்களில் போட்டிகள் இருந்தாலும் உங்கள் கடின உழைப்பின் மூலம் வெற்றியை பெறுவீர்கள். உங்கள் தொழில், வியாபாரங்களை விரிவு படுத்தும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலங்கள் ஏற்படும். வெளியூர், வெளிநாட்டு வியாபாரங்களில் மிகுந்த லாபம் ஏற்படும். பணிபுரிபவர்கள் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். ஒரு சிலருக்கு புதிய இடங்களுக்கு இடமாறுதல்கள் ஏற்படும்.
அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு எதிலும் ஏற்ற, இறக்கமான பலன்களே ஏற்படும். பொது மக்களின் ஆதரவை அவ்வளவு சுலபத்தில் பெற முடியாது. கட்சியில் உடன் இருப்பவர்களின் சதிகளுக்கு ஆளாக கூடும். விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கு அமோக விளைச்சல் உண்டாகும். புதிய பூமிகளை வாங்கி, புதிய பயிர்களை நட்டு வளர்த்து அதன் மூலமும் நல்ல லாபத்தை பெறுவீர்கள்.
கலைத்தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர், வெளிநாடு கலை பயணங்கள் செல்லும் சூழல் உண்டாகும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். பெண்களுக்கு உடல் நலம் நன்றாக இருந்தாலும் ஆரோக்கியத்தில் தொடர்ந்து அக்கறை செலுத்த வேண்டும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் குடும்ப விவகாரங்கள் குறித்து பிறருடன் பேசுவதை தவிர்க்க வேண்டும். கல்வி பயிலும் மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். விரும்பிய மேற்படிப்புகளை படிக்க கூடிய வாய்ப்புகள் அமையும்.
குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 11-10-2018 முதல் 21-10-2018 வரை இருக்கும் கால பலன்கள்
முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகளையும் லாபங்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய பொருளாதார பலம் இருக்கும். புதிய சொத்துக்களை வாங்கும் போது பலமுறை சிந்தித்து, தகுந்த ஆவணங்களை சரிபார்த்து வாங்குவது நல்லது. எதிலும் சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
குரு பகவான் அனுஷ நட்சத்திரத்தில் 22-10-2018 முதல் 20-12-2018 வரை இருக்கும் கால பலன்கள்
திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் தாராளமாக நடைபெறும். புதிய வாய்ப்புகள் மூலம் நற்பலன்களையும் லாபங்களையும் பெற முடியும். வேலை தேடி அலைபவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு அமையும். குடும்பத்திற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். பிறருடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் அவசியம்.
மிதுனம்
சிறந்த ஞாபகசக்தி கொண்ட மிதுன ராசிகர்களுக்கு 11-10-2018 அன்று குருபகவான் மிதுன ராசிக்கு 6 ஆம் இடத்தில் பெயர்ச்சியாக இருப்பதால் மறைமுக எதிரிகள் உண்டாவார்கள். அவ்வப்போது நோய்களால் பாதிக்கப்படும் சூழ்நிலை உண்டாகும். அன்றாட செலவுகளுக்கு கூட கடன் வாங்கக்கூடிய நிலை ஏற்படும். பெரும் தொகையை கடனாக கொடுத்தவர்கள் அதை சுலபத்தில் வசூல் செய்ய முடியாமல் தவிப்பார்கள்.
பண விவகாரங்களில், நம்பியவர்களே உங்களை மோசம் செய்யக்கூடும். உடன் பணிபுரிபவர்களிடம் அனுசரணையாக இருப்பது உங்களுக்கு நன்மையை தரும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை சிறிது காலம் தள்ளி வைப்பது நல்லது. வெளிநாட்டு தொடர்புடைய தொழில் வியாபாரங்களில் அனுகூலங்கள் ஏற்படும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
வயிறு கோளாறுகள் சம்பந்தமான பிரச்னைக்களால் அடிக்கடி அவதியுறுவீர்கள். உடல் உஷ்ணம் சம்பந்தமான வியாதிகளால் பாதிப்படையும். மனைவி மற்றும் பிள்ளைகள் வழியே மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். அதிக பயணங்கள் செய்வதாலும் உடல் நலம் பாதிக்கும். உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்குமிடையே பிரச்சனைகள் ஏற்படும். நீங்கள் பிறருக்கு நல்லது செய்ய முயற்சித்தாலும் அது உங்களுக்கே அவப்பெயரை சம்பாதித்து தரக்கூடிய நிலை உண்டாகும். பிறருக்கு முன்ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்க்க வேண்டும். பிறருக்கு கடன் கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரங்களில் சக போட்டியாளர்கள் உங்களுக்கு எதிராக மறைமுகமான சதிகளை செய்வார்கள்.
பணிபுரிபவர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். பிறர் செய்த தவறுக்கு நீங்கள் பொறுப்பேற்கும் நிலை ஏற்படலாம். உங்களுக்கு எதிராக சிலர் மறைமுகமாக சதிகளை செய்வார்கள். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு எதிரிக்கட்சியினருக்கு பணிந்து செல்ல கூடிய நிலை ஏற்படும். எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு பெரிய அளவில் லாபமில்லையென்றாலும் முதலீடுகளை திரும்ப பெறும் அளவிற்கு வருவாய் இருக்கும்.
விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்படும். கலைத்துறையில் இருப்பவர்கள் இருக்கின்ற வாய்ப்புகளை பயன் படுத்திக்கொள்ள வேண்டும். பொருளாதார ரீதியான நெருக்கடிகளை சந்திக்கும் நிலை ஏற்படும். திருமண வயது கொண்ட பெண்களுக்கு நல்ல வரன் அமையும். படிக்கும் மாணவர்கள் கல்வியில் சற்று மந்த நிலையை அடைவார்கள்.
கடகம்:
பிறரை சரியாக புரிந்து கொள்ளும் திறன் கொண்ட கடக ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு அதிபதியாகிய சந்திரனுக்கு நட்பு கிரகமாகிய குரு பகவான் 11-10-2018 அன்று உங்கள் ஜென்ம ராசிக்கு 5 ஆம் இடமான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகவிருக்கிறார். குரு பகவான் ஜாதகத்தில் எந்த ஒரு ராசிக்கும் ஐந்தாம் இடத்தில் வருவது மிக சிறப்பான ஒரு அம்சமாகும்.
இந்த குரு பெயர்ச்சியால் உங்களுக்கு பணம் அதிகளவில் வந்து சேரும். உங்கள் தாத்தா பாட்டிகளின் பரம்பரை சொத்துக்கள் உங்களை வந்தடையும். திருமணம் நடக்காமல் ஏங்கியவர்களுக்கு அவர்களின் மனம் மற்றும் குணநலத்திற்கு ஏற்ற வாறு வாழ்க்கை துணை அமையும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் பெருகும். உங்களுக்கு நீண்ட காலமாக இருந்து வந்த ஆரோக்கிய குறைபாடுகள், நோய்கள் நீங்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் பணிகளில் நீங்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு, பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆகியவை நீங்கள் விரும்பிய படியே கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உங்கள் வீட்டில் நீண்ட நாட்களாக தாமதமான சுபநிகழ்ச்சிகள் சீக்கிரத்திலேயே நடக்கத்தொடங்கும். திருமண வயது வந்த உங்கள் வீட்டு ஆண்கள், பெண்களுக்கு சிறப்பான முறையில் திருமணம் நடைபெறும். உறவினர்கள் மத்தியில் உங்களுக்கு செல்வாக்கும், மதிப்பும் ஏற்படும். புதிய வீடு, மனை, வாகனங்களை வாங்குவீர்கள். அரசு டெண்டர், கான்ட்ராக்ட் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மிகுந்த லாபம் கிட்டும். நீதிமன்றங்களில் உங்களுக்கு எதிராக போடப்பட்டிருந்த சொத்து சம்பந்தமான வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு அமையும்.
தொழில், வியாபாரங்களில் உங்களின் மறைமுக எதிரிகள் அழிவதால், உங்களுக்கு இருந்து வந்த அத்தனை பிரச்சனைகளும் தீரும். அதிகளவு வாடிக்கையாளர்கள் உங்களுக்கு கிடைத்து அதன் மூலம் எக்கச்சக்க லாபத்தை அடைவீர்கள். பணியிடங்களில் உங்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவும், விசுவாசமும் கிடைக்கும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு பதவிகள் கிடைக்கும். மக்கள் பிரதிநிதியாக சிறப்பாக செயலாற்றி மக்களின் நன்மதிப்பை பெரும் சூழல் உண்டாகும்.
சிலருக்கு கவுரவ பதவிகளும் கிடைக்கும். விவசாய தொழிலிருப்பவர்களுக்கு அவர்களின் நிலத்தில் பயிர்வகைகள் நல்ல விளைச்சலை கொடுக்கும். நீங்கள் கேட்ட விலைக்கு உங்களின் விளைபொருட்கள் வியாபாரிகளாலும், பொதுமக்களாலும் வாங்கப்படும். உங்களின் விவசாயக்கடன், மற்றும் பயிர்க்கடன் போன்றவற்றை திரும்ப அடைத்து விடக்கூடிய பொருளாதார பலத்தை பெறுவீர்கள். பெண்களின் உடல்நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைபேறில்லாமல் தவித்த பெண்களுக்கு புத்திர பாக்கியங்கள் உண்டாகும். புதிய ஆடை மற்றும் ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்களிடம் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள், மனஸ்தாபங்கள் நீங்கும்.
குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 11-10-2018 முதல் 21-10-2018 இருப்பதால் ஏற்படும் பலன்கள்
இந்த காலகட்டத்தில் உங்களுக்கு அதிகளவு தனவரவுகள் இருக்கும். வீட்டில் சுபிட்சம் பொங்கும். பிரிந்து போன உறவுகளும் நண்பர்களும் உங்களை தேடி வந்து சொந்தம் பாராட்டுவார்கள். குழந்தைகள் வழியில் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியடைவீர்கள். மாணவர்கள் தங்களின் கடின முயற்சி காரணமாக சிறந்த வெற்றிகளை பெறுவீர்கள். உங்கள் சம்பாத்தியத்தில் ஒரு தொகையை ஆன்மீக காரியங்களுக்காக செலவு செய்வீர்கள்.
குரு பகவான் அனுஷ நட்சத்திரத்தில் 22-10-2018 முதல் 20-10-2018 வரை இருப்பதால் ஏற்படும் பலன்கள்
இக்காலகட்டத்தில் பணவரவு பெரிய அளவில் லாபமும் நஷ்டமுமில்லாமல் சராசரியான அளவில் இருக்கும். சிலநேரம் எதிர்பாராத திடீர் தனவராவுக்கும் வாய்ப்புண்டு. திருமணமான தம்பதிகளிடையே சிறிய கருத்துவேறுபாடுகள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியம் சற்றே பாதிக்கப்படும். திருமணம் சம்பந்தமான சுபகாரியங்கள் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். வெளிநாடுகள் செல்ல முயல்பவர்களுக்கு சாதகமான நிலை உண்டாகும்.
சிம்மம்
தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகம் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு 11-10-2018 அன்று அவர்களின் ராசிக்கு 4 ஆம் இடத்தில் குரு பகவான் பெயர்ச்சியாகவிருக்கிறார். இதன் காரணமாக குடும்பத்தில் ஒற்றுமை குறைவும், பொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. உறவினர்களிடம் வம்பு சண்டைகள் ஏற்படக்கூடும். சுக வாழ்க்கையில் பாதிப்புகளை உண்டாகும். சுப காரிய முயற்சிகள் சற்று தாமதத்திற்கு பிறகு வெற்றியடையும். ஆடம்பர செலவுகள் செய்வதை தவிர்க்க வேண்டும்.
புத்திர வழியில் மனக்கவலைகள் உருவாகும். பிறரின் சொந்த விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். மற்றவர்களுக்கு பெரிய அளவில் கடன்கள் கொடுக்க கூடாது. தொழில் வியாபாரங்களில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். பணியிடங்களில் தங்களின் பணிகளை செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துவது நல்லது.
சரியான நேரத்திற்கு உண்ண முடியாததால் அல்சர், அஜீரண கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்படக்கூடும். குடும்பத்தில் வயதானவர்களுக்கு ஆரோக்கிய குறைவு ஏற்பட்டு மருத்துவ செலவுகளை செய்ய வேண்டிய சூழல் உண்டாகும். உடலில் அசதியும், மனதில் கவலைகளும் அதிகரிக்கும்.
குடும்ப பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக தான் இருக்கும். குடும்ப பாரம்பரிய சொத்துகள் சம்மந்தமான விடயங்களில் சற்று அலைச்சல் உண்டாகும். குழந்தைகள் வழியில் பிரச்சனைகள் உண்டாகும். அரசு டெண்டர், காண்ட்ராக்ட் தொழில்களில் இருப்பவர்களுக்கு சற்று தாமதங்களுக்கு பிறகு ஒப்பந்தங்கள் கிடைக்கும். கடன்களை வசூலிப்பதில் சிலருக்கு சட்ட ரீதியான பிரச்சனைகள் எழும். நீதிமன்றங்கள் செல்லும் நிலையும் சிலருக்கு ஏற்படும்.
புதிய தொழில் வியாபாரங்களில் ஈடுபடுபவர்களுக்கும், அவற்றை விரிவு படுத்த நினைப்பவர்களுக்கும் அரசாங்க அனுமதி கிடைப்பதில் சற்று தாமதங்கள் ஆகும். தொழிலாளர்கள் மற்றும் பணியாட்களின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிநாடு சென்று பணிபுரியும் யோகமும் சிலருக்கு உண்டாகும். தேவையற்ற பயணங்களை மேற்கொள்ளாமலிருப்பதால் உடல் மற்றும் மன சோர்வை தடுக்க முடியும். பணியாளர்கள், ஊழியர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும்.
எதிர்பாரா பணியிடமாற்றங்களும் சிலருக்கு கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கின்ற வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்வது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்களின் ஆதரவை பெற கடுமையாக உழைக்க வேண்டும்.
குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 11-10-2018 முதல் 21-10-2018 வரை இருக்கும் கால பலன்கள்
போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்று விலகும். எல்லாவற்றிலும் கடின முயற்சிகளை மேற்கொண்டாவது வெற்றி பெறுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய வாகனங்கள் சொத்துக்களை வாங்க கூடிய யோகம் உண்டாகும். தொழில் வியாபாரங்களில் சிறந்த லாபம் ஏற்படும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பதவி உயர்வுகள் கிடைக்கும்.
கன்னி
அனைவரிடமும் இதமாக பழகும் தன்மை கொண்ட கன்னி ராசசிகார்களே 11-10-2018 அன்று உங்கள் ராசிக்கு 3 ஆம் இடத்திற்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். இதனால் நீங்கள் ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் தடைகளும் தாமதங்களும் உண்டாக வாய்ப்புள்ளது. எல்லாவற்றிலும் மிக கடின முயற்சிகள் மேற்கொண்ட பிறகே வெற்றிபெறக்கூடிய நிலையிருக்கும். இந்த ராசியினருக்கு அர்த்தாஷ்டம சனியும் நடைபெறுவதால், அனைத்திலும் கஷ்டங்கள் இருக்கவே செய்யும். எல்லாவற்றிலும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும்.
குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமான சூழ்நிலை இருக்காது. திருமணம், புது வீடு கட்டுதல் போன்ற சுப காரியங்கள் சம்பந்தமான முயற்சிகளில் இழுபறி நிலை இருக்கும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க கூடிய திறன் உண்டாகும். பிறருடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது அவசியமாகும். உடனிருப்பவர்களே உங்களுக்கு துரோகம் இழைக்கக்கூடிய நிலை ஏற்படும். பயன்களால் அனுகூலங்கள் உண்டாகும். பொருளாதாரம் ஏற்ற இறக்கமான நிலையிலேயே இருக்கும்.
அதீத உடல் சோர்வால் எந்த விதமான பணிகளை செய்வதிலும் கஷ்டம் இருக்கும். உடல் நிலையும் அவ்வப்போது பாதிப்படைந்து பிறகு குணமாகும். மனக்கவலைகளும், மனஅழுத்தங்களும் அதிகரிக்கும் இருக்கும். பிள்ளைகள் வழியில் மருத்துவ செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். உடன் பிறந்தவர்களால் மனக்கவலைகள் ஏற்படும். உறவினர்களிடையே சுமூக உறவு இருக்காது.
குடும்பத்தேவைகளுக்காக கடன் வாங்க கூடிய சூழ்நிலை உண்டாகும். நீதிமன்ற வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் பிரச்சனைகள் எழலாம். தொழில், வியாபாரங்களில் உங்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் வேறு வியாபாரிகளுக்கு செல்ல கூடிய நிலை ஏற்படும். கூட்டாளிகளின் ஆலோசனையை கேட்பது சிறந்தது. அரசாங்க வழியில் ஏதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும்.
ஊழியர்கள் எதிலும் சற்று பணிந்து போவது தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கும். உங்களுக்கான பதவி உயர்வுகளை பிறர் தட்டி பறிக்க முயற்சி செய்வார்கள். பிறர் செய்த தவறுக்கு நீங்கள் பழியேற்க நேரிடும். அரசியல்வாதிகள் தங்களின் பதவிகளை காப்பாற்றி கொள்ள படாத பாடு படுவார்கள். சொந்த கட்சியினரே துரோகம் செய்வார்கள். மக்களிடம் அவப்பெயரை பெறக்கூடிய சூழ்நிலையிருப்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு சுமாரான லாபம் தான் கிடைக்கும். அவசரப்பட்டு கடன்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். கலைத்தொழிலில் இருப்பவர்கள் தங்களின் சக தொழிலாளர்களுடன் அனுசரித்து செல்வதால் நன்மைகள் ஏற்பட்டும்.
குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 11-10-2018 முதல் 21-10-2018 வரை இருக்கும் கால பலன்கள்
இந்த காலகட்டத்தில் சில சமயம் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவே கடன்கள் வாங்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும். உடல் நல பாதிப்புகளும் இருக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய யோகம் சிலருக்கு ஏற்படும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும்.
குரு பகவான் அனுஷ நட்சத்திரத்தில் 22-10-2018 முதல் 20-12-2018 வரை இருக்கும் கால பலன்கள்
இக்காலத்தில் எதிலும் சற்று ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் இருக்கும். உடலிலும் மனதளவிலும் மந்த நிலை, உற்சாகமின்மை போன்றவை இருக்கும். எல்லாவற்றிலும் கடின முயற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே விரும்பிய பலன்களை பெற முடியும். வேலை தேடுபவர்கள் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வது நல்லது.