மாமியார், மருமகள் இடையே ஏற்பட்ட சண்டை: உயிரை விட்ட மாமியார்… துடித்துபோன மருமகள் செய்த செயல்

இந்தியாவில் மாமியாருக்கும், மருமகளுக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குர்னூல் நகரை சேர்ந்தவர் ஜமால். இவர் மனைவி கலாவதி. தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இதில் இரண்டாவது மகன் பாலு, வெங்கட லட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்திருந்தார். மொத்த குடும்பமும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில் விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் விவசாயம் பணி தொடர்பாக வெங்கட லட்சுமிக்கும் அவர் மாமியார் கலாவதிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.

இதில் மனமுடைந்த கலாவதி விஷம் குடித்தார். இதையடுத்து பதறி போன வெங்கட லட்சுமி மாமியாரை மருத்துவமனைக்கு தூக்கி சென்றார். பின்னர் வெங்கட லட்சுமியும் விஷம் குடித்தார். இதன் பின்னர் கலாவதியும், வெங்கட லட்சுமியும் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்தார்கள். சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள். இதனிடையில் கலாவதி மற்றும் வெங்கட லட்சுமியின் சடலத்தை பார்த்து அவர்களின் குடும்பத்தார் கதறி அழுதது காண்போர் கண்களை குளமாக்கியது.