மாயமான பாஸ்போர்ட்டை எப்படி கண்டுபிடிப்பது? சின்மயிக்கு ராதாரவி அட்வைஸ்

திரை உலகில், தூரத்தில் நின்று கையசைத்தாலும் என்னை சைகை காட்டி கூப்பிட்டார் என்று சிலர் மீ டூ வில் புகார் கூறும் நிலைவரும் என்று தியாகராஜனுக்கு ஆதரவாக ராதாரவி குரல் கொடுத்துள்ளார்.நடிகர் பிரசாந்தின் தந்தையான நடிகர் தியாகராஜன் இயக்கத்தில் வெளியான பொன்னர் சங்கர் படத்தில் பயிற்சி புகைப்பட கலைஞராக பணிபுரிந்த தன்னை நடிகர் தியாகராஜன் பாலியல் ரீதியாக அணுகியதாக பிரித்திகா மேனன் என்ற பெண் பாலியல் புகார் தெரிவித்து பதிவு ஒன்றை முகநூலில் வெளியிட்டார்.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நடிகர் தியாகராஜன், மீ டு இயக்கத்தை வரவேற்பதாகவும்.தன் மீது வீண் பழி சுமத்தி உள்ள பிரித்திகா மேனன் மீது மான நஷ்ட வழக்கு தொடர இருப்பதாகவும் தெரிவித்தார்தியாகராஜனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகர் ராதாரவி மீ டூ என்ற பெயரில் சிலர் சேட்டை செய்வதாக கடுமையாக சாடினார் .

வைரமுத்து மீது மீடூ வில் புகார் தெரிவித்த பாடகி சின்மயி மாயமான பாஸ்போர்ட்டை எளிதாக கண்டுபிடிக்க யோசனை தெரிவித்தார் ராதாரவி.

இன்றைய உலகில் அனைவரும் முட்டாள்கள் இல்லை… பாஸ்போர்ட் நம்பரைக் கொடுத்தால் கணினியில் அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம் என்று ஆவேசமாக