
மற்றவர்களைக் கவரும் வண்ணம் இருக்கும் அற்புத குணம் 5 ராசிக்காரர்களும் உங்கள் ராசிப்படி உங்களது எந்த குணத்தால் மற்றவர்களை கவர்ந்திருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். மீனம்– மீன ராசிக்காரர்கள் தங்களுக்கு யாரேனும் கெடுதல் செய்தால், அவர்களை மன்னித்து, அவர்களுக்கு மற்றொரு வாய்ப்புக்களைக் கொடுக்கும் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். இந்த தன்னலமற்ற மற்றும் மன்னிக்கும் குணம் தான், மற்றவர்களை ஈர்ப்பதற்கு முக்கிய காரணமாக கூறலாம்.
சிம்மம்-சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் மீது போதுமான நம்பிக்கைக் கொண்டவர்கள். ஒருவேளை தாங்கள் விரும்பியதை அவர்களால் அடைய முடியாவிட்டால், அதை அடைவதற்கு எந்த அளவு வேண்டுமானாலும் போவார்கள். இந்த ஒரு விஷயம், இந்த ராசிக்காரர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றாக கூறலாம்.
கடகம்-கடக ராசிக்காரர்களின் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், அப்போது மற்றவர்களின் கருத்துக்களை பொறுமையாக கேட்டு தெரிந்து, பின் அமைதியாக பதிலளிப்பார்கள். இந்த ஒரு விஷயமே மற்றவர்களை இவர்கள் கவர்வதற்கு ஓர் காரணம் என்றும் கூறலாம்.
கன்னி-கன்னி ராசிக்காரர்கள் எதையும் அன்புடன் கற்றுக்கொள்வார்கள். இவர்கள் வாழ்வில் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதை நிறுத்தமாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் நம் வாழ்க்கையை வளப்படுத்தவும், ஒவ்வொரு நாளும் புதியவற்றை கற்றுக் கொள்ளவும் நம்மை ஊக்கப்படுத்துகிறார்கள்.
தனுசு-தனுசு ராசிக்காரர்கள் எந்த ஒரு விஷயத்தை கையில் எடுத்தாலும், அதை அச்சம் கொண்டு கைவிடாமல் செய்து முடிப்பார்கள். இவர்களிடம் இருக்கும் இந்த தைரியமான துணிச்சல் குணம் தான், இவர்களிடம் உள்ள ஓர் அற்புதமான மற்றும் மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஓர் குணமும் கூட.