மியூசிகலி ரொமான்ஸ் காட்சியில் கலக்கிய காதல் ஜோடி…. திருமணமான 7 நாளில் தலைகீழாக மாறிய வாழ்க்கை!

இன்றைய மியூசிகலி, டப்ஸ்மேஷ் என இளம்வயதினர் பல காணொளிகளை வெளியிட்டு வருகின்றனர். அவ்வாறு மோனிகா, ஜெய்சன் இருவரும் மியூசிகலி மூலம் காதலித்து திருமணம் முடித்துள்ளனர்.இவர்களின் ரொமாண்டிக்கான மியூசிகலி காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இடையில் இவர்கள் திருமணம் முடிந்த காட்சியினையும் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் ஜெய்சன் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார் என்றும், தன்னுடன் தோழியாக இருந்த வேறொரு பெண்ணுடன் இருந்து வருகிறார் என்றும் அவரின் அப்பாவைத் தவிர ஒட்டுமொத்த குடும்பத்தினரும் பணத்திற்காக இவ்வாறான சதியை செய்துள்ளனர் என்று கண்ணீருடன் காணொளி ஒன்றினை மோனிகா வெளியிட்டுள்ளார்.