பாடகி சின்மயி கடந்தமாதம் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்தினார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என கூறிவந்த அவர் தற்போது வரை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. இந்நிலையில் சின்மயி சினிமாவை விட்டே வெளியேற்றப்பட்டுள்ளார். சின்மயி பாடுவது மட்டுமின்றி படங்களில் பல ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசவும் செய்கிறார். அவரது குரலுக்கு ஏராளமாக ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது அவரை டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியனில் இருந்து நீக்கியுள்ளனர்.
இதனால் சின்மயி இனி டப்பிங் பேசவே முடியாது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. யூனியனில் மெம்பராக இல்லாத ஒருவர் சினிமாவில் டப்பிங் பேச முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. சின்மயி கடந்த இரண்டு வருடமாக கட்டணம் செலுத்தவில்லை என கூறி அவரை நீக்கியுள்ளனர். 96 படம் தான் சின்மயி பணியாற்றிய கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Anyway as of now it looks like ‘96 will be my last in Tamil. It is a good film to end my Tamil dubbing scene with if the termination were to continue.
Bye Bye!— Chinmayi Sripaada (@Chinmayi) 17 November 2018