மீம்ஸ் போட்டு கலாய்த்தவர்களுக்கு மாஸ் பதிலடி கொடுத்த அட்லீ..!

இயக்குனர் அட்லீ சினிமாவில் நுழைந்த சில காலத்திலேயே பெரிய இடத்திற்கு வந்தவர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் இளைய தளபதி விஜய்யை மூன்றாவது முறை இயக்கும் பெருமை இவருக்கும் உண்டு. இப்படத்தின் விஷயங்கள் அனைத்தும் பெரிய ப்ளஸ்ஸாக தான் இருந்து வருகிறது. ஆனாலும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது இவரை பற்றிய மீம்ஸ்கள் வளம் வரும். சமீபத்தில் அட்லீ பள்ளி குழந்தைகளின் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது அவர் பேசும்போது, ஒரு குட்டி கதை கூறிவிட்டு,

எத்தனையே டிரோல், மீம்ஸ் எல்லாம் வந்தாலும் விடாமல் முயற்சி செய்து முன்னேறிக் கொண்டே போக வேண்டும். நம் வெற்றிக்கு கை தட்ட ஒரு கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கும் என பேசியுள்ளார்.