முடியாத அந்த 100 நாட்கள்… பாலாஜியுடன் சேர யோசிக்கும் நித்யா! அப்படியென்ன கூறினார் தெரியுமா?

தனது கணவருக்கு தான் கொடுத்த கொடுத்த நூறு நாட்கள் முடிந்த பிறகு, நியூ இயரில் புதிதாக வாழ்க்கையை தொடங்குவோம் என நினைப்பதாக பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்த தாடி பாலாஜியின் மனைவி நித்யா தெரிவித்துள்ளார். காமெடி நடிகர் தாடி பாலாஜி கருத்துவேறுபாடு காரணமாக தனது மனைவி நித்யாவை பிரிந்து வாழ்ந்து வந்தார். அவர்கள் இருவரும் பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். அப்போது அவர்களுக்கு இடையேயான மனக்கசப்பு கொஞ்சம் மாறியது. தற்போது நித்யா கூறுகையில், “பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எனது வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கு.

ஒரு யூடர்ன் என்றே சொல்லலாம். நிறைய நல்ல விஷயங்கள் நடந்திருக்கு. நிறைய வாய்ப்புகள் வரத்துவங்கி இருக்கிறது. புற்றுநோயாளிகளுக்காக நானும் எனது மகளும் எங்களுடைய முடியை கொடுத்திருக்கிறோம். அதனால் தான் இந்த புது ஹேர் ஸ்டைல். பெண்கள் முன்னேற்றத்திற்காக இதே மாதிரி நிறைய விஷயங்கள் செய்ய விரும்புகிறேன். வாழ்க்கை ஆயிரம் மடங்கு மாறியிருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கையும் நல்ல போயிட்டு இருக்கு. முன்பு பாலாஜியை பார்க்கக்கூட மாட்டேன். ஆனால் இப்போது பார்த்து பேசும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது.

பாலாஜிக்கு நான் கொடுத்த நூறு நாட்கள் முடிந்த பிறகு நியூ இயரில் புதிதாக வாழ்க்கையை தொடங்குவோம் என நினைக்கிறேன். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கமல் சாரை இரண்டு முறை பார்த்தேன். அவரது பிறந்தநாளுக்கு கூட வாழ்த்து சொல்ல சென்றிருந்தேன். என் மீது அக்கறை காட்டும் அவருக்கு என்றும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்” என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் பிக் பாஸ் வீட்டில் கெட்ட வார்த்தைகள் பேசி சர்ச்சையில் சிக்கிய பாலாஜி, பின்னாளில் தனது கோபத்தைக் குறைத்துக் கொண்டு அனைவருக்கும் பிடித்த போட்டியாளர் ஆனார். இதனால், பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்டது போலயே, வெளியில் வந்தும் 100 நாட்கள் பாலாஜி சரியாக நடந்து கொண்டால், இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்வோம் என முன்பு நித்யா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.