முதலில் நான்..! பிறகு நீங்கள்..! பெற்ற மகளை சீரழித்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய விபரீத தந்தை! சென்னை அதிர்ச்சி

சென்னை பெரம்பூர் அடுத்த ஓட்டேரியை சேர்ந்த 52 வயதான லோகநாதனுக்கு மகன் மற்றும் 19 வயது மகள் உள்ளார். அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மூத்த மகனுக்கு திருமணம் ஆகி அவர் வில்லிவாக்கத்தில் வசித்து வருகிறார். 10 ஆண்டுகளுக்கு முன்னர் மனைவி இறந்துவிட்ட நிலையில் லோகநாதன் மகளுடன் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று லோகநாதன் தனது நண்பர்களான அய்யாவு, மணி ஆகியோருடன் மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு தூங்கிக் கொண்டிருந்த மகளை பார்த்து லோகநாதனின் கண்ணை மறைத்தது பெற்ற மகள் என்றும் பாராமல் தவறாக நடந்துகொண்டுள்ளார் லோகநாதன்.

இதுமட்டுமின்றி அவர்களது நண்பர்களான அய்யாவு, மணி ஆகியோரும் அந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிடம் அத்துமீறியுள்ளனர் . அப்போது எதேச்சையாக அங்கு மூத்த மகன் வீட்டிற்கு வர இவர்கள் செய்துகொண்டிருந்த அட்டூழியத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மூத்த மகன் 3 பேரையும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் பயந்து போன 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதை அடுத்து தங்கையை மீட்டு, கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்த மூத்த மகன் தந்தை மீதும்,

தந்தையின் கூட்டாளி மீதும் அயனாவரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில் தனக்கு நேர்ந்த கொடூரத்தை சொல்லி அழுதார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை

போலீசார் தேடிவந்த நிலையில் ஓட்டேரி மயானத்தில் பதுங்கி இருந்த லோகநாதன் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.