
மலையாள நடிகர் மனோஜை மணந்த ஊர்வசி ஒரு பெண் குழந்தைக்கு தாயானார். இந்நிலையில் மனோஜும், ஊர்வசியும் விவாகரத்து செய்துவிட்டனர். பின்னர் மனோஜ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மேலும் மகளையும் தன்னுடன் வைத்துக் கொண்டார். இந்நிலையில் ஊர்வசி திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கட்டிட கான்டிராக்டர் சிவபிரசாதை திருமணம் செய்து கொண்டார்.
இந்த வயதில் தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டது குறித்து ஊர்வசி கூறுகையில் சிவபிரசாத் வேறு யாரும் அல்ல அவர் எங்கள் குடும்ப நண்பர். எங்கள் குடும்பத்தில் ஒன்று என்றால் முதல் ஆளாக வந்து நிற்பார். அவரை எனது தாத்தா மற்றும் தம்பி கமலுக்கு மிகவும் பிடிக்கும். மன அமைதி வேண்டி ஒரு நாள் நாங்கள் அனைவரும் திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்திற்கு சென்றோம். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தபோது
பூசாரி மாலையை கொண்டு வந்து என் பக்கத்தில் உட்கார்திருந்த சிவபிரசாதை என் கணவர் என்று நினைத்து எங்களுக்கு மாலை அணிவித்தார். சிவபிரசாத் அந்த மாலையை கழற்ற முயன்றபோது அப்படியே இருக்கட்டும் என்று என் தாத்தா கூறினார். நாங்கள் இருவரும் பூஜை முடியும் வரை மாலையுடன் இருந்தபோது தான் எனக்குள் ஏதேதோ எண்ணங்கள் வந்தன. அதுவரை நினைக்காத மறுமணம் எண்ணம் தோன்றியது.