மூன்று மகள்களுக்கு பல ஆண்டுகள் பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை..! மகள்கள் செய்த செயல்

போதைக்கு அடிமையான தந்தை தொடர்ந்து மூன்று மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் மூவரும் சேர்ந்து தந்தையை பழிவாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ரஷ்யா நாட்டின் தலைநகரான மாஸ்கோவை சேர்ந்தவர் மைக்கேல் கச்சைட்ரான், இவர் மூத்த மகளான கிரிஸ்டினா 19 வயது,இரண்டாவது மகள் ஏஞ்சலினா (18) மற்றும் மூன்றாவது மகள் மரியா(16), ஒரு மகனும் உள்ளனர்.

போதை பொருள் எடுத்துக்கொள்ளும் பழக்கத்துக்கு அடிமையான மைக்கேல் மனைவியையும் மகனையும் சில ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டை விட்டு அடித்து விரட்டியுள்ளார்.இதையடுத்து தனது மூன்று மகள்களுக்கும் தொடர்ந்து பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வந்த இவர், சிலசமயங்களில் மிருகத்தனமாக அடித்து துன்புறுத்தியுள்ளார்.

தந்தையின் செயலை வெகுகாலம் பொறுத்து கொண்ட மூவரும் இனியும் பொறுக்க இயலாது என எண்ணி அவரை கொலை செய்ய முடிவெடுத்தனர்.

இதையடுத்து மூத்தமகள் கிரிஸ்டினா, மைக்கேலை கத்தியால் முதலில் குத்தியுள்ளார். பின்னர் ஏஞ்சலினா மற்றும் மரியாவும் கத்தியால் அவரை குத்த மைக்கேல் துடிதுடித்து இறந்தார்.சம்பவத்தை தொடர்ந்து பொலிசார் மூன்று சகோதரிகளையும் கைது செய்த நிலையில் தந்தையால் அனுபவித்த துன்பங்களை மூவரும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். மூவருக்கும் அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.