உணவுக்குழாயில் ஒரு பொருள் சிக்கியத்தகால் 3 வருடங்களாக உணவு உண்ணாமல் நபர் ஒருவர் வாழ்ந்து வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தீபக் நந்தி (46) என்பவர் ஸ்டேஷனரி கடை ஒன்றினை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு வீட்டில் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த போது, 2 பற்கள் உணவுடன் சேர்த்து வயிற்றுக்குள் சென்றுள்ளது.இதனை அறிந்துகொண்ட தீபக், வெளியில் சொன்னால் அவமானம் எனக்கருதி வீட்டில் யாரிடமும் சொல்லமால் மறைத்துள்ளார்.
அந்த பற்கள் இரண்டும் உணவுக்குழாயில் அடைத்துக்கொண்டதால், தீபக் உணவு உண்ணமுடியாமல் தவித்துள்ளார். தனது சகோதரன் மற்றும் தாய்க்கு தெரிந்துவிட கூடாது என்பதற்காக வீட்டில் அவர்கள் முன் உணவு அருந்துவதையே தவிர்த்துள்ளார். தனிமையில் மிகவும் சிரமப்பட்டு உணவு அருந்தி வந்துள்ளார்.தீபக் நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை புரிந்துகொண்ட அவருடைய சகோதரன் நடந்தவை பற்றி கேட்டறிந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு பரிசோதனை செய்து பார்த்ததில், வயிற்றில் சென்ற இரண்டு பற்கள் உணவுக்குழாய் முழுவதையும் சேதப்படுத்தியிருப்பதாக மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவருக்கு இரண்டு முறை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.இந்த நிலையில் தற்போது 3 வருடங்களுக்கு பின்னர் முதன்முறையாகா தீபக் மீண்டும் உணவு சாப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.