மொட்டை அடிக்கப்பட்ட பாலாஜியைப் பார்த்து…. நித்யா என்ன சொன்னார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று போட்டியாளர்களுக்கு ஒரு வித்யாசமான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரு தொலைபேசி அழைப்பு வரும் அதை எடுக்கும் நபர்கள் அடுத்த வாரம் நேரடியாக நாமினேட் செய்யபடுவார்கள்.அந்த தொலைபேசி அழைப்பை எடுக்கும் நபர்கள் நாமினேஷனில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் அந்த அழைப்பில் யாரை குறிபிடிக்கின்றனரோ அவர்களை கன்வின்ஸ் செய்து டாஸ்க்கை செய்ய வைக்க வேண்டும். இதில் நேற்று ஜனனிக்கு வந்த அழைப்பில் அடுத்த வாரம் ஜனனி நாமினேஷனில் இருந்து காப்பற்றபட வேண்டும் என்றால் பாலாஜியை கன்வின்ஸ் செய்து மொட்டை அடித்துக்கொள்ள செய்ய வேண்டும் என்று கூறப்பட்ட்டது.

இதனை கேட்டதும் போட்டியாளர்கள் அனைவருமே சற்று அதிர்ச்சியில் உறைந்தனர். நேற்று முழுவதும் யோசித்துக்கொண்டிருந்த பாலாஜியிடம், ஜனனி என்னை உங்கள் மகள் போஷிகவாக நினைத்து இதை செய்யுங்கள் என்று அவரை கேட்டுக்கொண்டார் , பின்னர் இறுதியில் ஜனனிக்காக மொட்டை அடித்துக் கொண்டுள்ளார் பாலாஜி என்று நிகழ்ச்சியின் இறுதியில் ஒளிபரப்பபட்ட வீடியோ காட்சிகளில் தெரிந்தது.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் வரை பாலாஜி தனது மனைவியை விட தனது மகள் போசிக்கவை பற்றி தான் அதிகம் பேசிகொண்டே இருப்பார். நேற்று ஜனனி, பாலாஜியிடம் மொட்டை அடித்து கொள்ள வேண்டும் என்று கேட்ட போதும் எனது பெண்ணிற்காக தான் யோசிக்கிறேன் அவளுக்கு பிறந்ததிலிருந்து ஒரு ஒரு முறை தான் மொட்டை அடித்துள்ளேன். அதனால் நான் எப்படி மொட்டை அடித்துகொள்வது என்று யோசித்தார்.ஆனால், நேற்றைய நிகழ்ச்சி முடிந்து ஒளிபரபப்ட்ட காட்சியில் பாலாஜி மொட்டையடிக்க சம்மதித்து விடுகிறார். ஜனனியை தனது மகள் போசிகாவாக நினைத்து சம்மதிப்பதாக பாலாஜி கூறியிருந்தார்

.இதனை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த நித்யா, பாலாஜி நினைத்து மிகவும் பெருமை படுவதாகவும், இது ஒரு மகத்தான மகள், அப்பா உறவு என்று பதிவிட்டு பாலாஜி, ஜனனி மற்றும் விஜயலட்சுமியை அரவனித்துக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார் நித்யா.

கடந்த வாரம் நடந்த ப்ரீஸ் டாஸ்கின் போது பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற நித்யா, பாலாஜியிடம் அனைவரும் உங்களை மாறிவிட்டேன் என்று கூறுகிறார்கள், நீங்கள் மாறினால் சந்தோசம் தான் என்று கண்ணீர் மல்க பேசி இருந்தார். தற்போது பாலாஜிக்கு ஆதரவாக நித்யா பேசி வருவதை காணும் போது விரைவில் பாலாஜியும், நித்யாவும் சேர்ந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை தோன்றுகிறது.