யார் இந்த பிக்பாஸ் ஐஸ்வர்யா? – பண மோசடி, சிறை, வழக்கு வெளிவந்த பல திடுக்கிடும் தகவல்கள்!

பிக் பாஸ் சீசன் 2, 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ரித்விகா தான் இந்த சீசனின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.தமிழ்ப் பெண்களுக்கே உரிய சில பொதுவான குணாதிசியங்கள் பிக் பாஸ் வீட்டில் ரித்விகாவிடமே அதிகமாகக் காணப்பட்டது. இதனை வெளியில் இருந்த மக்கள் மட்டுமல்ல, வீட்டில் இருந்த சக போட்டியாளர்களுமே ஒப்புக் கொண்டனர்.பிக் பாஸ் 2 பைனலில் அனைவருக்கும் ரித்விகா தான் வெற்றியாளர் என்று தெரிந்த பின்பும், ஐஸ்வர்யாவை முகத்தில் ஒரு சோகம் காணப்பட்டதாகவே இருந்தது.

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் ஐஸ்வர்யா பற்றிய ஒரு திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் அவர்களுக்கு தெரிந்த ஒரு நபரிடம் போனில் பேசலாம் என கூறிய பொது ஐஸ்வர்யா கோபி என்ற நபரிடம் பேசியுள்ளார்.பல கோடி பணத்தை பொது மக்களிடம் வசூலித்து ஏமாற்று வேலை செய்து சிறைக்குப் போய் ஜாமீனில் வெளிவந்திருக்கும் நபர்தான் கோபி.

பல நூறு பேரிடம் குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் பணத்தை அபேஸ் பண்ணி விட்டு சென்றவர். இவர் ஒரு பைனான்ஸ் கம்பெனி நடத்திக் கொண்டிருந்தார் அந்த கம்பெனியில் ஐஸ்வர்யா பார்ட்னராக இருந்துள்ளார்.

அப்படி என்றால் அந்த திருட்டிலும் இவர் பங்கு கண்டிப்பாக இருக்கும் அல்லவா அதே சந்தேகத்துடன்தான் அனைவரும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.