பொதுவாகவே திரைத்துறை பிரபலங்கள் தங்களின் தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள்.தங்களை அழகாக காட்டும் திரைப்படங்களில் நடிக்க தான் பெரும்பாலான பிரபலங்கள் விரும்புவார்கள் .ஆனால் அது போன்ற கட்டுப்பாடுகள் இல்லாமல் கதைக்காக தன்னுடைய உருவத்தை மாற்றிக்கொண்டு , அர்ப்பணிப்புடன் நடிக்கும் நடிகர்கள் எப்போதுமே மக்கள் மனதில் நிரந்தர இடம் பெறுகின்றனர்.கமல், விக்ரம், சிவாஜிகணேசன் போன்ற நடிகர்கள் இதற்கு நல்ல உதாரணம். அந்த வகையை சேர்ந்தவர் தான் நடிகர் விஜய் சேதுபதியும்.ஹீரோவாக திரையில் முன்னேறிக்கொண்டிருக்கும் போதே “சூதுகவ்வும்”, “ஆரஞ்சு மிட்டாய்” போன்ற திரைப்படங்களில் வயதான தோற்றத்தினை ஏற்று நடித்திருந்தார்.
விஜய் சேதுபதி எந்த திரைப்படத்தில் நடித்தாலும் அவரது நடிப்பு பாராட்டும்படியானதாகவே தான் இருக்கும். தற்போது அவர் மணிரத்தினம் இயக்கத்தில் நடித்திருக்கும் செக்கசிவந்த வானம் திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.மேலும் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் பேட்ட திரைப்படத்தில் வில்லனாக நடிக்கவிருக்கிறார்.இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் இணையத்தில் ஒரு புகைப்படம் வெளியாகி கடும் பரபரப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.
மிகவும் வயாதான தோற்றத்தில் இருக்கும் ஒரு நபரின் புகைப்படம் தான் அது.இந்த புகைப்படத்தில் இருப்பது விஜய் சேதுபதி என்றும், மணிகண்டன் இயக்கத்தில் உருவாகி வரும் ”கடைசி விவசாயி” படத்தில் அவரின் தோற்றம் இது என்றும் சொல்லப்படுகிறது. அந்த புகைப்படத்தில் இருக்கும் முதியவரின் தோற்றத்தை பார்க்கும் போது விஜய் சேதுபதியின் சாயல் லேசாக தெரிந்தாலும்,
அது விஜய் சேதுபதி தான் என உறுதியாக நம்ப யாராலுமே முடியவில்லை. இந்த புகைப்படம் குறித்து கடைசி விவசாயி படக்குழுவே வாய் திறந்தால் தான் உண்மை என்ன என தெரியவரும்.இதை பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்கள்