கொலை செய்வது எப்படி என யூடியூப் வீடியோவை பார்த்து என் இரண்டரை வயது மகளை கொன்றதாக குழந்தையின் தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜ் -தமிழ் இசக்கி தம்பதியினரின் இரண்டரை வயது மகள் ஷிவன்யா ஸ்ரீ. மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையை சந்தேகம் புரட்டி போட்டது. கணவர் மீதுள்ள சந்தேகத்தால் தன்னுடைய குழந்தையை கொன்றதாக தாய் கைதாகியுள்ளார்.கைது செய்யப்பட்டுள்ள தமிழ் இசக்கி அளித்துள்ள வாக்குமூலம் பொலிசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
நாகராஜ் வேறு ஒரு பெண்ணுடன் பேசி வந்த நிலையில், இரவில் அதிகமாக வாட்ஸ் – அப்பில் மெசெஜ் செய்து வந்துள்ளார்.இதனால் அவர் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் இதுகுறித்து சண்டைபோட்டு வந்தேன்.மனைவியுடன் பேசுவதை நிறுத்திய நாகராஜ், தொலைபேசி அழைப்புகளை தவிர்த்தார். இதனால் விரக்தியடைந்த நான் தற்கொலை செய்ய முடிவெடுத்தேன்.நான் உயிரிழந்தால் குழந்தையின் கதி என்னாகும்? எனவே வேறு வழியின்றி, குழந்தையை கொலை செய்வது எப்படி என யூடியூப் மூலம் வீடியோவை பார்த்தேன்.
யூடியூப்பில் பார்த்தபடி குழந்தையை தண்ணீர் டிரமுக்குள் முக்கி, மூச்சடைக்கச் செய்து செய்தேன்.உயிரிழந்த குழந்தையை தண்ணீரிலிருந்து வெளியே எடுத்து, கட்டிலில் கிடத்திவிட்டு, நான் தற்கொலை செய்வதற்காக மின்விசிறியில் தூக்கு மாட்டிக்கொள்ள முயற்சித்தபோத, கணவரின் இருசக்கர வாகன சத்தம் கேட்டதால், மயக்கமடைந்தது போல் கீழே படுத்துக்கொண்டு,
அடையாளம் தெரியாத இருவர் தன்னை தாக்கிவிட்டு, குழந்தையை நீரில் மூழ்கி கொன்றதாக நாடகமாடினேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.இதையடுத்து திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தமிழ்இசக்கியை பொலிசார் ஆஜர்படுத்தினர். 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.