ரத்த ருசி பார்த்த ராட்வெய்லர்! ஆபத்தான நிலையில் சிறுமி! காப்பாற்றச் சென்றவர்களும் அரங்கேறிய விபரீதம்

சென்னை அருகே மாங்காடு பகுதி அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீ ராம ஜெயம் என்னும் தெரு உள்ளது. இந்த தெருவில் சுகந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டு ரக நாய் வகையான ராட்வைலரை வளர்த்து வருகிறார். எப்பொழுதும் மாலை நேரத்தில் நாயினை காற்றாட அழைத்துச் செல்வார். இதேபோன்று இன்று மதியம் அவர் நாயினை அழைத்துச் செல்ல முற்பட்டார். அப்பொழுது அவர் வீட்டு கேட்டை திறந்தவுடன் அவர் கட்டுப்பாட்டிலிருந்து நாய் விலகியது. நாய் சாலையோரத்தில் விருவிருவென ஓடியது. அந்நேரம் பார்த்து எதிர்பாராவிதமாக சாலையோரத்தில் 12 வயது மதிக்கத்தக்க கீர்த்தனா என்ற சிறுமி நடந்து கொண்டிருந்தாள்.

அவளை துரத்திய நாய் சிறிது தூரத்தில் பிடித்து அவளை கடித்துக் குதறி உள்ளது. சிறுமி படும் கஷ்டத்தை பார்த்த பொதுமக்களில் இருவர் சிறுமியை காப்பாற்ற முயன்றனர். பெரும் சிரமத்திற்கு பிறகு நாயிடம் இருந்து சிறுமியை காப்பாற்றினர். அவ்விருவரையும் நாய் கடித்துள்ளது. கீர்த்தனாவுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. உயிருக்குப் போராடிய நிலையில் கீர்த்தனாவை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


இந்த ராட்வெய்லர் வகை நாய் மிகவும் கொடூரமானது. அமெரிக்காவில் பல இடங்களில் இந்த நாயை வளர்க்க தடை உள்ளது. மலேசியா, சிங்கப்பூரில் ராட்வெய்லர் வகை நாய்களை வளர்க்க கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. காரணம் இந்த நாய் உரிமையாளர்களை

தவிர மற்ற அனைவரையுமே எதிரியாகத்தான் கருதும். இதனால் ரத்த ருசி பார்த்துள்ள ராட்வெய்லர் மீண்டும் மீண்டும் கடிக்கும் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கின்றனர். இது போன்ற நாய்களை வளர்ப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.