
பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாகும் ராஜாராணி என்ற தொலைகாட்சி தொடர் பெண்களை மட்டுமல்ல இளைஞர்களையும் தன்வசப்படுத்தியுள்ளது என்று தான் கூற வேண்டும்.அதில், செம்பாவாக நடித்து வரும் ஆல்ய மானசாவிற்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் சீரியல் தொடங்கிய நாள் முதலே ரசிகர்களிடம் பிரபலம். நடிப்பை தாண்டி இவர் நடனத்தில் ஆர்வம் கொண்டவர், அவரது நடனத்தையும் பல நிகழ்ச்சியில் பார்த்திருக்கிறோம்.
சமீபத்தில் கூட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1 மில்லியன் பேர் தொடருகின்றனர் என்று எனது ரசிகர்களுக்கு மிக்க நன்றி என்று பதிவும் போட்டிருந்தார்.இதனால், குறித்த சீரியல், இவருக்காக தான் சிறப்பாக ஓடுகிறது என்று அனைவரின் தரப்பிலும் பேசப்பட்டு வருகிறது.
இவரைப் போலவே, நாதஸ்வரம் சீரியலில் மகா என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை கீதாஞ்சலி. இவருக்கும் ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர்.
இந்த சீரியலில், வினோதினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால் அவர், இப்போது ராஜா ராணி சீரியலை விட்டு விலகியதாக கூறப்படுகிறது.