ராட்சசி போல் மாறிய ஐஸ்வர்யா- வீட்டையே அலங்கோலம் செய்ததை பாருங்க.!

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து இன்று பிக் பாஸ் 2வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி 91 நாட்களை கடந்துள்ள நிலையில், வீட்டில் ஒவ்வொருவராக வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கிடையே கடும் சண்டை நிலவி வருகிறது.

இறுதிக்கட்டத்தை நோக்கிச் செல்லும் இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் வெற்றியை தட்டிச் செல்ல பல வேலைகளை செய்து வருகின்றனர்.பிக்பாஸ் வீட்டில் புதிய கேரக்டராக இருக்கிறார் ஐஸ்வர்யா. அவர் வெளியே வரும்போது கண்டிப்பாக மனநல மருத்துவரை பார்த்தால் நன்றாக இருக்கும்.

எப்போதும் சண்டை யாருடனும் ஒத்துப்போவது இல்லை. நேற்று திருட்டுதனமாக டாஸ்க் விளையாடி ஜனனியிடம் வெறுப்பை சம்பாதித்தார்.இன்று வந்த புதிய புரொமோவில் டாஸ்க்கில் எல்லாவற்றையும் போட்டு உடைக்கிறார்.

அவரின் செயலால் கோபமாக ஜனனி அவர் ஒருபக்கம் உடைக்கிறார். இதனை பார்க்கும் போது முழு ராட்சசியாக ஐஸ்வர்யா மாறியிருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.