தமிழ் சினிமாவின் பிரபல வில்லனாக இருந்தவர் எம்.ஆர். ராதா. இவரது மகனான ராதாரவியும் வில்லன், குணச்சித்திரம் என பல வேடங்களில் நடித்து அனைவரையும் தற்போது வரை அசத்திவருகிறார். இவர் பெயர் முன்பு டத்தோ என்ற பட்டம் இருக்கும். ஆனால் இந்த பட்டமே போலியாக வைத்திருக்கிறார் என #Metoo மூலம் பிரபலமான பாடகி சின்மயி புகார் கூறியதோடு சம்பந்தப்பட்டவர்கள் அனுப்பிய மெயிலையும் ஆதாராமாக கூறினார். ராதாரவி அதை மறுத்ததோடு தனக்கு அரசாங்கத்தால் கொடுக்கப்படவில்லை எனவும் சுல்தானிடம் இருந்து பெற்றதாகவும் சின்மயி இவ்வாறு கூறி இருப்பது.
இதை தனக்கு பட்டம் அளித்தவர்களையே அவமதிக்கும் வகையில் இருக்கிறது இதனால் சின்மயி மலேசியா செல்லவே தடை விதிக்கலாம் என கூறி இருந்தார். ஆனால் தற்போது வந்துள்ள தகவல்படி மலேசியாவில் சில மாகாணத்தில் சுல்தான்கள் இல்லை, அதில் ராதாரவிக்கு சுல்தானால் டத்தோ பட்டம் வழங்கப்பட்டதாக கூறப்பட்ட மலாக்கா மாகாணமும் ஒன்று. மேலும் ராதாரவி டத்தோ பட்டத்தை சுல்தானிடம் வாங்குவது போன்ற படம் வெளிவந்தது. அதை ஆராய்ந்து பார்க்கையில் அதில் இருப்பவர் போலி சுல்தான் என மலேசிய அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டவராம்.
மலாக்காவின் சுல்தானாக ராஜா நூர் ஜான் ஷா என்ற தொழிலதிபர் தன்னை தானே அறிவித்து கொண்டார். மேலும் sir பட்டத்துக்கு இணையாக மதிப்புமிக்க பட்டமாக மலேசியாவில் கருதப்படும் datuk பட்டத்தை.
பணம் வாங்கி விற்று பலபேருக்கு பட்டமளித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். ராதாரவியும் இவரிடம் ஏமாந்துவிட்டாரா என தெரியவில்லை என்று கிசுகிசுக்கப்படுகிறது.